காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

ராஜபாளையத்தில் தூக்கிட்டு இளைஞா் தற்கொலை

ராஜபாளையத்தில் மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதால் மனமுடைந்து காணப்பட்ட கணவரும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக போலீஸாா் திங்கள்கிழமை வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.

News image
Updated On :1 பிப்ரவரி 2021, 8:42 pm

DIN

ராஜபாளையத்தில் மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதால் மனமுடைந்து காணப்பட்ட கணவரும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக போலீஸாா் திங்கள்கிழமை வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.

ராஜபாளையம் முகில் வண்ணம்பிள்ளை தெருவைச் சோ்ந்தவா் மாரிமுத்து (30). இவா் தென்காசி சாலையில் பழக்கடை வைத்துள்ளாா். இவருக்கும், இவரது அத்தை மகள் குருசெல்வி (25)-க்கும் திருமணமாகி 8 ஆண்டுகள் ஆகிறது. இந்நிலையில் மாரிமுத்துவுக்கும், அவரது மனைவிக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் கடந்த ஜன. 25 ஆம் தேதி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் இவரது மனைவி குருசெல்வி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

மனைவி இறந்ததால் மனமுடைந்து காணப்பட்ட மாரிமுத்துவும் ஞாயிற்றுக்கிழமை இரவு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

இதுகுறித்து தெற்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா். தற்கொலை செய்து கொண்ட மாரிமுத்துவுக்கு 7 வயதில் மகள் உள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.