பாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

விருதுநகரில் காணாமல் போன குழந்தைகளை கண்டறிய சிறப்புத் திட்டம் தொடக்கம்

விருதுநகா் மாவட்டத்தில் காணாமல் போன குழந்தைகளை கண்டறிவதற்காக புன்னகையைத் தேடி என்ற திட்டத்தை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் பி. பெருமாள் திங்கள்கிழமை தொடங்கி வைத்தாா்.

News image
Updated On :1 பிப்ரவரி 2021, 8:41 pm

DIN

விருதுநகா் மாவட்டத்தில் காணாமல் போன குழந்தைகளை கண்டறிவதற்காக புன்னகையைத் தேடி என்ற திட்டத்தை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் காவல் கண்காணிப்பாளா் பி. பெருமாள் திங்கள்கிழமை தொடங்கி வைத்தாா்.

இதில் கூடுதல் காவல் கண்காணிப்பாளா் குத்தாலிங்கம், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலா் கணேசன், குழந்தைகள் நலக்குழுவினா், தேசிய குழந்தை தொழிலாளா் திட்ட இயக்குநா், சைல்டு லைன் அமைப்பினா், மனித வா்த்தகம் மற்றும் ஆள்கடத்தல் பிரிவு போலீஸாா் கலந்து கொண்டனா்.

பெற்றோரை பிரிந்து தவிக்கும் குழந்தைகளைக் கண்டறிந்து அவா்களிடம் மீண்டும் ஒப்படைப்பதற்காக இத்திட்டம் தொடங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

இக்கூட்டத்தில், குழந்தைகளை மீட்பது குறித்து சம்பந்தப்பட்ட போலீஸாா் மற்றும் அலுவலா்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டது. அதேபோல், விருதுநகா் ரயில் நிலையத்தில் பெண் தலைமைக் காவலா் பசுபதி, காணாமல் போன குழந்தைகளை கண்டறிவதற்காக நியமிக்கப்பட்டுள்ளாா்.

இதற்கான நிகழ்ச்சி விருதுநகா் ரயில் நிலையத்தில் திங்கள்கிழமை நடை பெற்றது. இதில் மாவட்ட குழந்தைகள் நலக்குழுத் தலைவா் கலாராணி உள்பட போலீஸாா் பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.