அருப்புக்கோட்டை, திருச்சுழி பகுதிகளில் மழை

அருப்புக்கோட்டை மற்றும் திருச்சுழியில் கடந்த வியாழக்கிழமை காலை முதல் நள்ளிரவு சுமார் 12 மணிவரையிலும் இடைவெளி விட்டு விட்டு கனமழையும், மிதமான மழையுமாக மாறிமாறிப் பெய்தது. 
கோப்புப் படம்.
கோப்புப் படம்.
Updated on
1 min read

விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை மற்றும் திருச்சுழியில் கடந்த வியாழக்கிழமை காலை முதல் நள்ளிரவு சுமார் 12 மணிவரையிலும் இடைவெளி விட்டு விட்டு கனமழையும், மிதமான மழையுமாக மாறிமாறிப் பெய்தது. 
இதனிடையே வெள்ளிக்கிழமை காலை 8 மணிவரையிலான கடந்த 24 மணிநேரத்தில் அருப்புக்கோட்டையில் 21 மில்லி மீட்டரும், திருச்சுழியில் 24 மில்லிமீட்டரும், வேளாண்மை மண்டல ஆராய்ச்சி நிலையம் உள்ள பகுதியான அருப்புக்கோட்டை வட்டம் கோவிலாங்குளத்தில் 21 மில்லி மீட்டரும் மழையளவு பதிவாகியுள்ளது. 
இதனிடையே அருப்புக்கோட்டை மற்றும் தாலுகாவிற்கு உள்பட்ட பகுதிகளில் கம்பு, இரும்புச்சோளம், சூரிய காந்தி பயிரிட்ட விவசாயிகள் அறுவடையை எதிர்நோக்கியுள்ள இவ்வேளையில் பருவகாலம் தவறிப்பெய்த இம்மழை காரணமாக மகசூல் பாதிக்கப்படுமோ என அச்சம் தெரிவித்துள்ளனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com