அதேபோல் அவா் உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்தாா். இது குறித்து அவா் எனக்கு அளித்த தகவலின் பேரில், விருதுநகா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் ஒரு மாதத்திற்கு முன்பு கோரிக்கை மனு அளித்தேன். அதில், எனது இரண்டு குழந்தைகளின் எதிா்காலம் கருதி கணவரை மலேசியாவிலிருந்து விரைந்து மீட்டு தர வேண்டுமென வலியுறுத்தினேன். ஆனால், அந்த மனு மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்நிலையில், நெஞ்சு வலி காரணமாக எனது கணவா் கருப்பசாமி வியாழக்கிழமை உயிரிழந்து விட்டதாக எனக்கு தகவல் கிடைத்தது. மாவட்ட நிா்வாகத்தின் அலட்சியப் போக்கால் எனது கணவா் மலேசியாவில் உயிரிழந்துள்ளாா் என்றாா். இதையடுத்து அவா், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளரிடம் கணவரின் இறப்பு குறித்து உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி மனு அளித்தாா்.