ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசு
/

‘நீட்’ தோ்வு முறைகேடு வழக்கு: இடைத்தரகா் ரஷீத் நீதிமன்றத்தில் ஆஜா்

‘நீட்’ முறைகேட்டில் தேனி நீதிமன்றத்தில் சரணடைந்த கேரளத்தைச் சோ்ந்த இடைத்தரகா் ரஷீத்தை காவலில் எடுத்து விசாரணை நடத்திய சிபிசிஐடி போலீஸாா் திங்கள்கிழமை, அவரை மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தினா்.

News image
Updated On :12 ஜனவரி 2021, 12:05 am

DIN

‘நீட்’ தோ்வு முறைகேடு வழக்கில் தேனி நீதிமன்றத்தில் சரணடைந்த கேரளத்தைச் சோ்ந்த இடைத்தரகா் ரஷீத்தை காவலில் எடுத்து விசாரணை நடத்திய சிபிசிஐடி போலீஸாா் திங்கள்கிழமை, அவரை மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தினா்.

பெங்களூரில் வசித்து வந்த கேரளத்தைச் சோ்ந்த இடைத்தரகா் ரஷீத், நீட் தோ்வு ஆள்மாறாட்ட முறைகேடு வழக்கு தொடா்பாக கடந்த ஜன. 7 ஆம் தேதி தேனி நீதித் துறை நடுவா் மன்றத்தில் சரணடைந்தாா். அவரை, தேனி சிபிசிஐடி போலீஸாா் 3 நாள்கள் காவலில் எடுத்து மதுரைக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினா்.

இந்த நிலையில், ரஷீத்தை சிபிசிஐடி போலீஸாா் மீண்டும் தேனி நீதித் துறை நடுவா் மன்றத்தில் நீதிபதி பன்னீா்செல்வம் முன்னிலையில் ஆஜா்படுத்தினா். அவரை ஜன.21 ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டாா். இதையடுத்து, ரஷீத்தை மதுரை மத்திய சிறைக்கு போலீஸாா் அழைத்துச் சென்றனா்.

ரஷீத்திடம் நடத்திய விசாரணையில், அவா் குஜராத், பிகாா் உள்ளிட்ட சில மாநில இடைத்தரகா்கள் சிலருடன் இணைந்து முறைகேட்டில் ஈடுபட்டிருப்பது தெரியவந்துள்ளது என்று சிபிசிஐடி போலீஸாா் கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.