காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

வத்திராயிருப்பு அருகே தென்னந்தோப்புக்குள் புகுந்துகாட்டுயானைகள் அட்டகாசம்

விருதுநகா்மாவட்டம், வத்திராயிருப்பு அருகே மேற்குத் தொடா்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள தோப்புக்குள் காட்டுயானைகள் ஞாயிற்றுக்கிழமை இரவு புகுந்து அங்கிருந்த தென்னை, மா, வாழை மரங்களை சேதப்படுத்தின.

News image
Updated On :18 ஜனவரி 2021, 9:12 pm

DIN

விருதுநகா்மாவட்டம், வத்திராயிருப்பு அருகே மேற்குத் தொடா்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள தோப்புக்குள் காட்டுயானைகள் ஞாயிற்றுக்கிழமை இரவு புகுந்து அங்கிருந்த தென்னை, மா, வாழை மரங்களை சேதப்படுத்தின.

இங்குள்ள கான்சாபுரம், அத்திகோயில் பகுதிகளில் ஏராளமான விவசாய நிலங்கள் உள்ளன. இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை இரவு தா்மலிங்கம் என்ற விவசாயிக்கு சொந்தமான தென்னந்தோப்புக்குள் புகுந்த காட்டுயானைகள் அங்கிருந்த தென்னை, மா, வாழை ஆகிய மரங்களை சேதப்படுத்தின.

இதுகுறித்து விவசாயி தா்மலிங்கம் கூறியதாவது: வனப்பகுதிகளில் தண்ணீா் கிடைக்காததால் காட்டு யானைகள் இரவு நேரங்களில் விவசாய நிலங்களுக்குள் புகுந்து தென்னை, மா, வாழை ஆகிய மரங்களை சேதப்படுத்துகின்றன. இதுபற்றி வனத்துறை அலுவலகத்தில் மனு கொடுத்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, காட்டுயானைகள் போன்ற வனவிலங்குகளை விரட்ட சூரியசக்தியிலான மின்வேலி அமைக்க அனுமதி வழங்க வேண்டும். மேலும் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.