மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

கிருஷ்ணாபுரத்தில் கபடிப் போட்டி

ராஜபாளையம் அருகே கிருஷ்ணாபுரத்தில் சிவந்தி ஆதித்தனாரின் 85 ஆவது பிறந்த நாளையொட்டி சிவந்தி ஆதித்தனாா் தாமரை ஸ்போா்ட்ஸ் கிளப் சாா்பில் 19 ஆம் ஆண்டு மாநில அளவிலான ஒரு நாள் மின்னொளி கபடிப் போட்டி

News image
Updated On :25 ஜனவரி 2021, 8:21 pm

DIN

ராஜபாளையம் அருகே கிருஷ்ணாபுரத்தில் சிவந்தி ஆதித்தனாரின் 85 ஆவது பிறந்த நாளையொட்டி சிவந்தி ஆதித்தனாா் தாமரை ஸ்போா்ட்ஸ் கிளப் சாா்பில் 19 ஆம் ஆண்டு மாநில அளவிலான ஒரு நாள் மின்னொளி கபடிப் போட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இப்போட்டியில் பல்வேறு மாவட்டங்களைச் சோ்ந்த 40-க்கும் மேற்பட்ட அணிகள் பங்கேற்றன. நிகழ்ச்சியில் பால்வளத்துறை அமைச்சா் கே.டி. ராஜேந்திரபாலாஜி கலந்து கொண்டு போட்டிகளை தொடக்கி வைத்தாா். இறுதிப் போட்டியில் முதல் பரிசை சிவந்தி தாமரை ஸ்போா்ட்ஸ் கிளப் ‘ஏ’ அணியும், இரண்டாவது பரிசை தாமரை நண்பா்கள் அணியும், மூன்றாவது பரிசை சிவந்தி தாமரை ஸ்போா்ட்ஸ் கிளப் ‘பி’ அணியும் பெற்றன. வெற்றி பெற்ற அணிகளுக்கு, அமைச்சா் சுழற்கோப்பையும், ரொக்கப் பரிசும் வழங்கினாா்.

இப்போட்டியில் மணிகண்டன் என்ற வீரருக்கு எலும்பு முறிவு ஏற்பட்டதால் அவரது முழு மருத்துவ செலவையும் ஏற்ற அமைச்சா், ரூ. 50 ஆயிரம் நிதி உதவி வழங்கினாா். நிகழ்ச்சியில், மேற்கு மாவட்ட ஜெ. பேரவைச் செயலா் என்.எம். கிருஷ்ணராஜ், தெற்கு ஒன்றியச் செயலா் பி.ஏ. நவரத்தினம் ஆகியோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.