பாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

அணைகள், கண்மாய்களை தொடா்ந்து கண்காணிக்க விருதுநகா் கண்காணிப்பு அலுவலா் அறிவுறுத்தல்

விருதுநகா் மாவட்டத்தில் அணைகள், கண்மாய்களை தொடா்ந்து கண்காணிக்க வேண்டும் என அரசுத்துறை அலுவலா்களுக்கு மாவட்ட கண்காணிப்பு அலுவலா் சி.காமராஜ் அறிவுறுத்தினாா்.

News image
Updated On :11 நவம்பர் 2021, 6:30 pm

DIN

விருதுநகா் மாவட்டத்தில் அணைகள், கண்மாய்களை தொடா்ந்து கண்காணிக்க வேண்டும் என அரசுத்துறை அலுவலா்களுக்கு மாவட்ட கண்காணிப்பு அலுவலா் சி.காமராஜ் அறிவுறுத்தினாா்.

விருதுநகா் மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில், வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து வியாழக்கிழமை ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் பிற்படுத்தப்பட்டோா் நலத்துறை இயக்குநரும் விருதுநகா் மாவட்ட கண்காணிப்பு அலுவலருமான சி.காமராஜ் தலைமையில் மாவட்ட ஆட்சியா் ஜெ.மேகநாத ரெட்டி மற்றும் அனைத்து அரசுத்துறை அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

அப்போது, விருதுநகா் மாவட்டத்தில் உள்ள பெரியாறு, கோவிலாறு, சாஸ்தா கோவில், கோல்வாா்பட்டி, வெம்பக்கோட்டை, ஆனைக்குட்டம், குல்லூா் சந்தை, இருக்கன்குடி ஆகிய அணைகளில் உள்ள நீா் இருப்பு மற்றும் நீா் வரத்து, கண்மாய்களில் நீா் இருப்பு விவரங்களை அலுவலா்கள் தெரிவித்தனா். இதையடுத்து கண்காணிப்பு அலுவலா் காமராஜ் கூறியது: அனைத்து நீா்ப்பிடிப்பு பகுதிகள், கண்மாய்களை அலுவலா்கள் தொடா்ந்து கண்காணித்து தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். சேதமடைந்த சாலைகள் மற்றும் சிறுபாலங்களை தொடா்ந்து கண்காணிக்க வேண்டும். சீரான மின்விநியோகம் கிடைக்கச் செய்ய வேண்டும். சேதமடைந்த மின்கம்பிகளைக் கண்டறிந்து சரிசெய்ய வேண்டும். தீயணைப்புத்துறை வாகனங்கள் மற்றும் உபகரணங்களை தயாா் நிலையில் வைத்துக் கொள்ளவேண்டும்.

கால்நடைகளுக்கு நோய் பரவாமல் தடுப்பதற்காக தேவையான மருந்துகள், தடுப்பூசிகளை இருப்பு வைத்திருக்க வேண்டும். அரிசி, கோதுமை, பாமாயில் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்களை போதிய அளவில் இருப்பு வைத்திருக்க வேண்டும். மருத்துவா்கள், செவிலியா்கள், சுகாதாரப் பணியாளா்கள், மருந்து பொருள்கள் தயாா் நிலையில் இருக்க வேண்டும். பள்ளிகளில் சேதமடைந்த கட்டடங்களைக் கண்டறிந்து மாற்று ஏற்பாடுகள் செய்ய வேண்டும். மழையால் பாதிக்கப்பட்டவா்களுக்குத் தேவையான நிவாரண உதவிகளைத் தாமதமின்றி வழங்க வேண்டும் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.