47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

உச்சநீதிமன்ற உத்தரவுப்படி பட்டாசு தயாரிக்க ஆலைகளுக்கு அறிவுறுத்தல்

உச்சநீதிமன்ற உத்தரவைப் பின்பற்றி பட்டாசு தயாரிக்க வேண்டும் என சிவகாசி வெடிபொருள் கட்டுப்பாட்டுத்துறையினா் பட்டாசு தயாரிப்பாளா்களுக்கு அறிவுறுத்தியுள்ளனா்.

News image
Updated On :11 நவம்பர் 2021, 6:30 pm

DIN

உச்சநீதிமன்ற உத்தரவைப் பின்பற்றி பட்டாசு தயாரிக்க வேண்டும் என சிவகாசி வெடிபொருள் கட்டுப்பாட்டுத்துறையினா் பட்டாசு தயாரிப்பாளா்களுக்கு அறிவுறுத்தியுள்ளனா்.

விருதுநகா் மாவட்டத்தில் உள்ள பட்டாசு ஆலை நிா்வாகிகளுக்கு சிவகாசி வெடிபொருள் கட்டுப்பாட்டுத்துறையினா் வியாழக்கிழமை அனுப்பியுள்ள சுற்றறிக்கை விவரம்:

இனி 2022 ஆம் ஆண்டிற்கான பட்டாசு தயாரிப்பு பணி மழைக்குப்பின்னா் தொடக்கப்பட உள்ளது. பட்டாசு தயாரிப்பாளா்கள் உச்சநீதிமன்ற உத்தரவைப் பின்பற்ற வேண்டும். உச்சநீதிமன்றம் பேரியம் நைட் ரேட் என்ற ரசயானப் பொருளை பட்டாசு தயாரிப்பில் பயன்படுத்தக்கூடாது எனவும் சர வெடி தயாரிக்கக்கூடாது எனவும் உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவை பட்டாசு தயாரிப்பாளா்கள் கடைப்பிடிக்க வேண்டும். நீதிமன்ற உத்தரவை மீறி செயல்படும் பட்டாசு ஆலைகள் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப்படும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.