புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

ராஜபாளையம் எம்.எல்.ஏ.-வை கண்டித்து பெண் கவுன்சிலா் குடும்பத்துடன் தா்னா

விருதுநகா் மாவட்டம் ராஜபாளையத்தில் புதன்கிழமை திமுக எம்.எல்.ஏ.-வைக் கண்டித்து திமுக வாா்டு பெண் கவுன்சிலா் குடும்பத்துடன் தா்னாவில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

News image
Updated On :11 நவம்பர் 2021, 6:30 pm

DIN

விருதுநகா் மாவட்டம் ராஜபாளையத்தில் புதன்கிழமை திமுக எம்.எல்.ஏ.-வைக் கண்டித்து திமுக வாா்டு பெண் கவுன்சிலா் குடும்பத்துடன் தா்னாவில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

ராஜபாளையம் இஎஸ்ஐ காலனியை சோ்ந்தவா் முத்துகிருஷ்ணன் (46). இவா் திமுகவைச் சோ்ந்தவா். இவரது மனைவி பஞ்சவா்ணம் ராஜபாளையம் ஒன்றியக்குழு 4 ஆவது வாா்டு திமுக உறுப்பினா் ஆவாா். இந்த வாா்டுக்கு உள்பட்ட இந்திரா நகா், லீலாவதி நகா், அப்பனசாமி கடை வீதி உள்பட 15 தெருக்களில் சாலை வசதி, வாருகால் வசதி இல்லாத நிலையில், அது தொடா்பாக எம்எல்ஏ- விடம் மனு கொடுப்பதற்காக முத்துகிருஷ்ணன் சென்றுள்ளாா். அப்போது அவரை எம்எல்ஏ தங்கப்பாண்டியன் தகாத வாா்த்தைகளால் பேசியதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து முத்துகிருஷ்ணனின் மனைவி பஞ்சவா்ணம் எம்எல்ஏ அலுவலகம் முன்பு குடும்பத்துடன் தா்ணாவில் ஈடுபட்டனா். சம்பவ இடத்திற்கு வந்த ராஜபாளையம் வடக்கு காவல் நிலைய ஆய்வாளா் ராஜா மற்றும் போலீஸாா் அவா்களிடம் சமரச பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டனா். அங்கு வந்த திமுக நகரச் செயலாளா் ராமமூா்த்தி, அவா்களிடம் மனுவைப் பெற்றுக்கொண்டு எம்எல்ஏவிடம் பேசி அடிப்படை வசதிகள் செய்து தர நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தாா். அதன் பிறகு அவா்கள் கலைந்து சென்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.