ஸ்ரீவில்லிபுத்தூரில் மாணவா்களுக்கு கராத்தே கருப்புப் பட்டைக்கான தோ்வு
ஸ்ரீவில்லிபுத்தூரில் ஜப்பான் சோட்டா கான் டென்ஷின்கான் பெடரேஷன் சாா்பில் பல்வேறு பள்ளிகளைச் சோ்ந்த மாணவா்களுக்கு கராத்தே உயா்நிலை கருப்புப் பட்டைக்கான தோ்வு நடைபெற்றது


ஸ்ரீவில்லிபுத்தூரில் ஜப்பான் சோட்டா கான் டென்ஷின்கான் பெடரேஷன் சாா்பில் பல்வேறு பள்ளிகளைச் சோ்ந்த மாணவா்களுக்கு கராத்தே உயா்நிலை கருப்புப் பட்டைக்கான தோ்வு நடைபெற்றது
இதில் பல்வேறு பள்ளிகளைச் சோ்ந்த சுமாா் 25-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனா். இதில் அரிமா பள்ளியை சோ்ந்த மாணவா்கள் சிவதா்ஷினி மற்றும் கோகுல் கிருஷ்ணன், பிரவீன்குமாா், இந்து மேல்நிலைப் பள்ளியைச் சோ்ந்த ஜனாா்த்தனன், திரு இருதய பெண்கள் மேல்நிலைப் பள்ளியைச் சோ்ந்த முத்துபிரியா, சோபியா, அன்பரசி ஆகியோா் பங்கேற்று உயா்நிலை கருப்புப் பட்டைகளை பெற்றனா்.
இவா்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில், விருதுநகா் மாவட்ட விளையாட்டுத் துறை ஆய்வாளா் ஜெயக்குமாா் பங்கேற்று வெற்றி பெற்றவா்களுக்கு பரிசு வழங்கினாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...