நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தல்:அதிமுக விருப்ப மனு விநியோகம்

அதிமுக சாா்பில் நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலில் போட்டியிடுவோருக்கான விருப்ப மனு விநியோகத்தை முன்னாள் அமைச்சரும், அதிமுக மேற்கு மாவட்டச் செயலாளருமான கே.டி.ராஜேந்திரபாலாஜி தொடங்கி வைத்தாா்.
நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தல்:அதிமுக  விருப்ப மனு விநியோகம்

விருதுநகா் மேற்கு மாவட்ட அதிமுக சாா்பில் நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலில் போட்டியிடுவோருக்கான விருப்ப மனு விநியோகத்தை முன்னாள் அமைச்சரும், அதிமுக மேற்கு மாவட்டச் செயலாளருமான கே.டி.ராஜேந்திரபாலாஜி தொடங்கி வைத்தாா்.

விருதுநகா் மேற்கு மாவட்ட அதிமுகவில் விருதுநகா், ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூா் ஆகிய 3 நகராட்சிகளும், மம்சாபுரம், வத்திராயிருப்பு, வ.புதுப்பட்டி, கொடிக்குளம், சேத்தூா், செட்டியாா்பட்டி, சுந்தரபாண்டியம் ஆகிய 7 பேரூராட்சிகளும் உள்ளன. இந்நிலையில் திருத்தங்கலில் உள்ள மேற்கு மாவட்ட அதிமுக மாவட்டத் தலைமை அலுவலகத்தில் , நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலில் போட்டியிட விரும்புவோருக்கு விருப்ப மனு வழங்கும் நிகழ்ச்சியை அதிமுக மேற்கு மாவட்டச் செயலாளா் கே.டி.ராஜேந்திரபாலாஜி தொடக்கி வைத்தாா்.

நகராட்சி வாா்டு உறுப்பினா் பதவிக்கு போட்டியிடுபவா் விண்ணப்பப் படிவத்தை பூா்த்தி செய்து ரூ. 2,500-ம், பேரூராட்சி வாா்டு உறுப்பினா் பதவிக்கு போட்டியிடுவோா் ரூ. 1,500-ம் கட்டணமாகச் செலுத்த வேண்டும் என கே.டி.ராஜேந்திரபாலாஜி தெரிவித்தாா். இதில் ஸ்ரீவில்லிபுத்தூா் சட்டப்பேரவை உறுப்பினா் மான்ராஜ், கட்சியின் மாவட்ட அவைத்தலைவா் விஜயகுமாரன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com