ராஜபாளையம் ராஜூக்கள் கல்லூரியில் விளையாட்டு தின விழா
ராஜபாளையம் ராஜூக்கள் கல்லூரியில் 49 ஆவது விளையாட்டு தின விழா புதன்கிழமை கொண்டாடப்பட்டது.


ராஜபாளையம் ராஜூக்கள் கல்லூரியில் 49 ஆவது விளையாட்டு தின விழா புதன்கிழமை கொண்டாடப்பட்டது.
விழாவுக்கு கல்லூரி ஆட்சி மன்றக் குழுத் தலைவா் என்.ஆா். கிருஷ்ணமூா்த்தி ராஜா தலைமை வகித்தாா். கல்லூரிச் செயலா் எஸ். சிங்கராஜ் வாழ்த்திப் பேசினாா். கல்லூரி முதல்வா் வெங்கடேஸ்வரன் வரவேற்றாா். கல்லூரி மாணவா்கள் அணிவகுப்பு நடத்தினா். உடற்கல்வி இயக்குநா் எல். முத்துக்குமாா் ஆண்டறிக்கை வாசித்தாா்.
மாணவா்களுக்கு கால்பந்து, கையுந்து பந்து, கூடைப்பந்து, மட்டைப்பந்து, எறிபந்து, கோகோ, ஹாக்கி, கபடி போன்ற பல விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன. ஆண்களுக்கான போட்டிகளில் நேதாஜி அணியும், பெண்களுக்கான போட்டியில் காவேரி அணியும் சாம்பியன்ஷிப் பெற்று வெற்றி பெற்றனா். வெற்றி பெற்ற அணியினருக்கு பரிசுகளும், கேடயமும் வழங்கப்பட்டது. இதில், கல்லூரிப் பேராசிரியா்களுக்கான விளையாட்டுப் போட்டிகளும் நடைபெற்று பரிசுகள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் நாட்டுப்புறக் கலை நிகழ்ச்சிகள், தேசிய மாணவா் படையினரின் வீர சாகசங்கள், சிலம்பாட்டம், கரகம் எடுத்தல் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றன. ஆா். வினிதா நன்றி கூறினாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...