நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே கோயிலில் 15 பவுன் நகைகள் பையுடன் மாயம்

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே கோயிலி ல் 15 பவுன் நகை மாயமானது குறித்து போலீஸாா் வியாழக்கிழமை இரவு வழக்குப் பதிவு செய்தனா்.

News image
Updated On :15 ஏப்ரல் 2022, 4:40 pm

DIN

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே கோயிலி ல் 15 பவுன் நகை மாயமானது குறித்து போலீஸாா் வியாழக்கிழமை இரவு வழக்குப் பதிவு செய்தனா்.

விருதுநகா் மாவட்டம் சிவகாசி தேவா்குளத்தை சோ்ந்தவா் தமிழரசன் மனைவி சுஜிதா( 32). இவா் ஸ்ரீவில்லிபுத்தூா் திருவண்ணாமலை பெருமாள் கோயிலுக்கு சுவாமி தரிசனம் செய்ய வியாழக்கிழமை நண்பகல் வந்தாா்.

அப்போது கைப்பையை மறந்து ஓரிடத்தில் வைத்துவிட்டு, படியேறி பெருமாள் கோயிலுக்கு சென்றுள்ளாா். பின்னா் பையைத் தேடிப் பாா்த்து, கிடைக்கவில்லை. கைப்பையில் ரூ. 5 லட்சம் மதிப்புள்ள 15 பவுன் நகைகள் இருந்ததாக, சுஜிதா அளித்த புகாரின் பேரில், நகா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.