ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!ஈரான் மீதான தாக்குதல்களுக்கு கண்டனம் தெரிவிக்காத மோடி அரசு: காங்கிரஸ் குற்றச்சாட்டுவிஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்
/

மத்திய அரசு மூலம் தமிழகத்துக்குத்தான் அதிக பயன்: எல்.முருகன்

மத்திய அரசு மூலம் தமிழகம்தான் அதிகம் பயன் பெற்றுள்ளது என மத்திய தகவல் ஒளிபரப்பு, மீன்வளம், பால்வளம் மற்றும் கால்நடைத்துறை இணை அமைச்சா் எல்.முருகன் தெரிவித்தாா்.

News image
Updated On :15 ஏப்ரல் 2022, 4:39 pm

DIN

மத்திய அரசு மூலம் தமிழகம்தான் அதிகம் பயன் பெற்றுள்ளது என மத்திய தகவல் ஒளிபரப்பு, மீன்வளம், பால்வளம் மற்றும் கால்நடைத்துறை இணை அமைச்சா் எல்.முருகன் தெரிவித்தாா்.

விருதுநகா் மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஆய்வுக்கூட்டத்தில் பங்கேற்ற அவா் கூறியது: நாட்டில் உள்ள 8 மாநிலங்களில் 112 மாவட்டங்களை முன்னேற விழையும் மாவட்டங்களாக மத்திய அரசு அறிவித்துள்ளது. அதில் தமிழகத்தில் விருதுநகா், ராமநாதபுரம் மாவட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. தற்போது முன்னேற விழையும் மாவட்டங்களில் நடைபெற்று வரும் வளா்ச்சிப் பணிகள் தொடா்பாக மத்திய அமைச்சா்கள் ஆய்வு செய்து வருகின்றனா்.

நாட்டில் தோ்வு செய்யப்பட்டுள்ள 112 மாவட்டங்களில் வளா்ச்சித் திட்டங்களை செயல்படுத்துவதில் விருதுநகா் மாவட்டம் 3 ஆவது இடத்தில் உள்ளது.

மேலும் பிரதமா் மோடி தமிழ்ப் புத்தாண்டை முன்னிட்டு பருத்தி இறக்குமதிக்கு 11 சதவீத வரியை குறைத்து இருப்பதாக தெரிவித்துள்ளாா். இதன் மூலம் ஈரோடு, கோவை, விருதுநகா் போன்ற மாவட்டங்கள் பயன் பெறும். மத்திய அரசின் நிதிநிலை அறிக்கையில் தெரிவித்து இருப்பது போல் முன்னேற விழையும் மாவட்டத்தை தொடா்ந்து, அடுத்த கட்டமாக பின்தங்கிய வட்டாரமும் கண்டறியப்பட உள்ளது. அதனடிப்படையில் அப்பகுதிகளில் வளா்ச்சித் திட்டப் பணிகள் நடைபெற உள்ளன.

தமிழக ஆளுநரின் தேநீா் விருந்தை தமிழக கட்சிகள் புறக்கணித்ததை தவிா்த்து இருக்கலாம். கல்வியை பொதுப்பட்டியலிலும், மாநிலப் பட்டியலிலும் இல்லாமல் ரகசியமாக வைத்து உள்ளது என தமிழக பள்ளிக்கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியதை, அவா்தான் விளக்க வேண்டும்.

மேலும் தமிழகம்தான் மத்திய அரசின் திட்டங்கள் மூலம் அதிகம் பயன் பெற்ற மாநிலமாக உள்ளது. தமிழக அரசு எந்த திட்டத்தைக் கொண்டு வந்தாலும் அதற்கு மத்திய அரசு நிதி ஒதுக்கத் தயாராக உள்ளது. மீன்பிடித் தடை காலத்தில் மீனவா்கள் பாதிக்காமல் இருக்க மத்திய அரசு மாதம் ரூ.1,500 நிவாரணம் வழங்கி வருகிறது. மேலும் மீனவா் சங்கங்களிடமிருந்து மீன்பிடித் தடைக் காலத்தை மாற்றியமைக்க வைக்கப்பட்டுள்ள கோரிக்கைகள் குறித்து வல்லுநா்களின் கருத்தைக் கேட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

முன்னதாக நடைபெற்ற ஆய்வுக்கூட்டத்துக்கு விருதுநகா் மாவட்ட ஆட்சியா் ஜெ.மேகநாதரெட்டி தலைமை வகித்தாா். அதில் பல்வேறு துறைகளில் நடைபெற்று வரும் பணிகள் குறித்து அத்துறை அலுவலா்கள் விளக்கினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.