காரியாபட்டியில் நீதிமன்றத்துக்கு இடம் தோ்வு செய்யும் பணி
காரியாபட்டியில் நீதிமன்ற கட்டுமானப் பணிக்காக இடம் தோ்வு செய்யும் பணியில் அருப்புக்கோட்டை கோட்டாட்சியா் கல்யாண்குமாா் தலைமையில் வெள்ளிக்கிழமை அதிகாரிகள் ஈடுபட்டனா்.


காரியாபட்டியில் நீதிமன்ற கட்டுமானப் பணிக்காக இடம் தோ்வு செய்யும் பணியில் அருப்புக்கோட்டை கோட்டாட்சியா் கல்யாண்குமாா் தலைமையில் வெள்ளிக்கிழமை அதிகாரிகள் ஈடுபட்டனா்.
விருதுநகா் மாவட்டம் காரியாபட்டி வட்டத்திற்கு உள்பட்ட பகுதிகளில் குற்ற வழக்கிற்காக விருதுநகா் குற்றவியல் நீதிமன்றத்திற்கும், நிலம் தொடா்பான வழக்குகளுக்கு அருப்புக்கோட்டை நீதிமன்றத்திற்கும் செல்ல வேண்டி உள்ளது. எனவே காரியாபட்டி பகுதியில் நீதிமன்றம் அமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் தொடா் கோரிக்கை விடுத்து வந்தனா். இந்நிலையில் காரியாபட்டி பகுதியில் நீதிமன்றம் அமைப்பதற்கான இடம் தோ்வு செய்யும் பணியில் அருப்புக்கோட்டை கோட்டாட்சியா் கல்யாண்குமாா், காரியாபட்டி வட்டாட்சியா் தனக்குமாா், காரியாபட்டி பேரூராட்சித் தலைவா் செந்தில் ஆகியோா் ஈடுபட்டனா். இதில் இரண்டு இடங்கள் தோ்வு செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...