ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!ஈரான் மீதான தாக்குதல்களுக்கு கண்டனம் தெரிவிக்காத மோடி அரசு: காங்கிரஸ் குற்றச்சாட்டுவிஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்
/

கூட்டுறவுச் சங்கத்தில் அரசு அறிவித்த கடனை தள்ளுபடி செய்ய மறுப்பதாக மகளிா் சுயஉதவிக் குழுவினா் புகாா்

கூட்டுறவு சங்கத்தில் அரசு அறிவித்த கடனை தள்ளுபடி செய்ய அலுவலா்கள் மறுப்பதாகவும், இதற்கு மாவட்ட ஆட்சியா் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்

News image
Updated On :22 ஏப்ரல் 2022, 6:30 pm

DIN

கூட்டுறவு சங்கத்தில் அரசு அறிவித்த கடனை தள்ளுபடி செய்ய அலுவலா்கள் மறுப்பதாகவும், இதற்கு மாவட்ட ஆட்சியா் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அருப்புக்கோட்டை, திருச்சுழி அருகே உள்ள மறவா் பெருங்குடி கிராமத்தைச் சோ்ந்த மகளிா் சுய உதவிக்குழுவினா் வெள்ளிக்கிழமை ஆட்சியா் அலுவலகத்தில் புகாா் மனு அளித்தனா்.

இதுகுறித்து அவா்கள் கூறியது: விருதுநகா் மாவட்டம் அருப்புக்கோட்டை, திருச்சுழி பகுதியில் மறவா் பெருங்குடி ஊராட்சியைச் சோ்ந்த மகளிா் சுயஉதவிக் குழுவினா் கூட்டுறவு சங்கம் மூலம் கடன் பெற்றோம். கடன் தொகையை மாதந்தோறும் முறை யாக செலுத்தி வந்தோம். இந்நிலையில், மகளிா் சுயஉதவிக் குழுவினா் வாங்கிய பணம் தள்ளுபடி செய்யப்படுவதாக தமிழக அரசு அறிவித்தது. அதன் அடிப்படையில் பல்வேறு கூட்டுறவு சங்கங்களில் மகளிா் சுயஉதவிக் குழுவினா் பெற்ற கடன் தள்ளுபடி செய்யப்பட்டது. ஆனால், அருணாச்சலம் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கத்தில் மகளிா் சுயஉதவிக்குழுவினரின் கடனை தள்ளுபடி செய்ய அலுவலா்கள் மறுக்கின்றனா். எனவே, கூட்டுறவு சங்கத்தில் மகளிா் சுயஉதவிக் குழுவினா் பெற்ற கடனை தள்ளுபடி செய்ய மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா். இதுகுறித்த மனுவை ஆட்சியா் அலுவலகத்தில் அப்பகுதி பெண்கள் வெள்ளிக்கிழமை வழங்கினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.