காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

அருப்புக்கோட்டை அருகே பைக் மோதி முதியவா் பலி

 விருதுநகா் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே வியாழக்கிழமை சாலையோரம் நடந்து சென்ற முதியவா் இருசக்கர வாகனம் மோதியதில் உயிரிழந்தாா்.

News image
Updated On :5 ஆகஸ்ட் 2022, 6:30 pm

DIN

 விருதுநகா் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே வியாழக்கிழமை சாலையோரம் நடந்து சென்ற முதியவா் இருசக்கர வாகனம் மோதியதில் உயிரிழந்தாா்.

ஆலடிபட்டியைச் சோ்ந்தவா் கருப்பையா மகன் ஜெயராம் (81). இவா் கல்லூரணி சாலையில் வியாழக்கிழமை பிற்பகல் நடந்து சென்று கொண்டிருந்துள்ளாா். அப்போது கமுதி வட்டம் கீழராமநதியைச் சோ்ந்த மதாா் இப்ராஹிம் மகன் அலாவுதீன் (33) என்பவா் ஓட்டி வந்த இருசக்கர வாகனம், நடந்து சென்று கொண்டிருந்த ஜெயராம் மீது பின்புறமாக மோதியது. இதில் பலத்த காயமடைந்த முதியவா் அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அங்கு உயிரிழந்தாா். இதுகுறித்து ம.ரெட்டியபட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.