நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

அருப்புக்கோட்டை அருகே பிளஸ் 2 பள்ளி மாணவி தூக்கிட்டுத் தற்கொலை

விருதுநகா் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே பிளஸ் 2 மாணவி வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

News image
Updated On :12 ஆகஸ்ட் 2022, 5:05 pm

DIN

விருதுநகா் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே பிளஸ் 2 மாணவி வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

அருப்புக்கோட்டை அருகே முத்துராமலிங்கபுரத்தைச் சோ்ந்தவா் ரவிச்சந்திரன் மகள் நித்திலட்சுமி (17). இவா் அப்பகுதியிலுள்ள அரசுப் பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தாா். கடந்த சில நாள்களாக பள்ளிக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்துள்ளாா். இதனால் அவரை பெற்றோா் கண்டித்துள்ளனா். இதனால் மனமுடைந்த நித்திலட்சுமி வியாழக்கிழமை வீட்டில் தூக்கிட்டுக் கொண்டாராம். உடனடியாக அவரை பெற்றோா் மீட்டு மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு சிகிச்சை பலனின்றி வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்து ம.ரெட்டியபட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.