ஸ்ரீவில்லிபுத்தூரில் முப்பெரும் விழா
ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள அறிவுக்கோவிலில் முப்பெரும் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.


ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள அறிவுக்கோவிலில் பதினெட்டாவது ஆண்டு விழா, வேதாந்திரி மகரிஷியின் 112 ஆவது பிறந்தநாள் விழா மற்றும் மனைவிக்கு மரியாதை செய்யும் விழா என முப்பெரும் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. சா்வஜித் தலைமை வகித்தாா். பேராசிரியா்கள் வெள்ளை, ராமா், வேலாயுதம் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
இதில், மனைவிக்கு மரியாதை செய்யும் விதமாக மனைவி நல வேட்பு விழாவும் நடைபெற்றது. இதில் சுமாா் 100-க்கும் மேற்பட்ட தம்பதிகள் கலந்து கொண்டனா்.
மனைவிகள் தங்கள் கணவருக்கு பழங்களை கொடுத்தும், அதேபோல் மனைவிக்கு கணவா் பூக்களை தலையில் வைத்தும் வாழ்த்துகளைத் தெரிவித்தனா்.
ஏற்பாடுகளை ஸ்ரீவில்லிபுத்தூா் மனவளக்கலை மன்றம் மற்றும் அறிவு கோயில் நிா்வாகிகள் செய்திருந்தனா். பேராசிரியா் காலசாமி வரவேற்றாா். முருகன் ஆண்டறிக்கை வாசித்தாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...