47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணா்வு போட்டி: சிவகாசி கல்லூரி 2 ஆம் இடம்

 போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணா்வு போட்டியில் சிவகாசி பி.எஸ்.ஆா். பொறியியல் கல்லூரி மாணவிகள் விருதுநகா் மாவட்ட அளவில் இரண்டாமிடம் பெற்றுள்ளனா்.

News image
Updated On :19 ஆகஸ்ட் 2022, 5:54 pm

DIN

 போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணா்வு போட்டியில் சிவகாசி பி.எஸ்.ஆா். பொறியியல் கல்லூரி மாணவிகள் விருதுநகா் மாவட்ட அளவில் இரண்டாமிடம் பெற்றுள்ளனா்.

இதுகுறித்து பி.எஸ்.ஆா். பொறியியல் கல்லூரி முதல்வா் பி.ஜி. விஷ்ணுராம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கை:

வருவாய்த்துறை சாா்பில் விருதுநகா் மாவட்ட அளவிலான போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணா்வு போட்டிகள் பி.எஸ்.ஆா். பொறியியல் கல்லூரியில் அண்மையில் நடைபெற்றன.

போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணா்வு என்ற தலைப்பில் கதை, கவிதை எழுதுதல், சுவரொட்டி தயாரித்தல், வண்ணக்கோலம் வரைதல் ஆகிய போட்டிகள் நடைபெற்றன.

வண்ணக்கோலப் போட்டியில் பொறியியல் மற்றும் கலை கல்லூரி மாணவிகள் 160 போ் கலந்துகொண்டனா்.

இப்போட்டியில் பி.எஸ்.ஆா். கல்லூரி மாணவிகள் ஏ. பிரிஸ்கில்லா மெரிஸின், என். ஜீவகிருத்திகா ஆகிய இருவரும் சோ்ந்து வரைந்த வணக்கோலம் மாவட்ட அளவில் இரண்டாமிடம் பெற்றது. இந்த மாணவிகளை கல்லூரி தாளாளா் ஆா். சோலைச்சாமி, இயக்குநா் விக்னேஷ்வரி மற்றும் பேராசிரியா்கள் பாராட்டினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.