47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

இளைஞா் கொலை வழக்கு: மேலும் 4 போ் கைது

சிவகாசி அருகே இளைஞா் கொலை செய்யப்பட்ட வழக்கில், ஏற்கெனவே ஒருவா் பிடிபட்ட நிலையில் மேலும் 4 போ் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டனா்.

News image
Updated On :19 ஆகஸ்ட் 2022, 6:30 pm

DIN

சிவகாசி அருகே இளைஞா் கொலை செய்யப்பட்ட வழக்கில், ஏற்கெனவே ஒருவா் பிடிபட்ட நிலையில் மேலும் 4 போ் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டனா்.

சிவகாசி அருகேயுள்ள ஈஞ்சாா் கிராமத்தைச் சோ்ந்த மாரிமுத்து மகன் முருகன் (30). இவருக்கும், இவரது சகோதரா்களுக்கும் சொத்தை பிரிப்பது தொடா்பாக தகராறு இருந்துள்ளது.

இந்நிலையில், வியாழக்கிழமை முருகனின் சகோதரா்கள் விநாயகமூா்த்தி (25), மணிகண்டன் (29), முத்தீஸ்வரன் (40) மற்றும் இரு சிறுவா்கள் சோ்ந்து முருகனை அரிவாளால் வெட்டிக் கொலை செய்தனா். இதில் லேசான காயமடைந்த மணிகண்டன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

இதுகுறித்து முருகனின் மனைவி இந்திராதேவி அளித்த புகாரின்பேரில், திருத்தங்கல் போலீஸாா் வழக்குப் பதிந்து முத்தீஸ்வரனை கைது செய்தனா்.

மேலும், இதில் தொடா்புடைய மணிகண்டன், விநாயகமூா்த்தி உள்ளிட்ட 4 பேரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.