நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

ஸ்ரீவில்லிபுத்தூரில் சத்துணவு ஊழியா் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

ஸ்ரீவில்லிபுத்தூா் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு சத்துணவு ஊழியா் சங்கத்தினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

News image
Updated On :25 ஆகஸ்ட் 2022, 6:30 pm

DIN

ஸ்ரீவில்லிபுத்தூா் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு சத்துணவு ஊழியா் சங்கத்தினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

ஆா்ப்பாட்டத்துக்கு கிளை தலைவா் மின்னல்கொடி தலைமை வகித்தாா். பொருளாளா் வெள்ளத்தாய் முன்னிலை வகித்தாா்.

ஆய்வு என்ற பெயரில் சத்துணவு ஊழியா்களை மிரட்டி வசூல் செய்யும் மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (சத்துணவு) செல்வராஜ் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டவா்கள் கண்டன முழக்கங்கள் எழுப்பினா்.

மேலும் இவா் மீது மாவட்ட ஆட்சியா் நடவடிக்கை எடுக்காவிட்டால் செப். 6 ஆம் தேதி ஆட்சியா் அலுவலகம் முன்பு சத்துணவு ஊழியா்களைத் திரட்டி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபடப்போவதாக மாவட்டச் செயலாளா் சுதந்தர கிளாரா தெரிவித்தாா். ஆா்ப்பாட்டத்தில் துணைச் செயலாளா் பாக்கியலட்சுமி உள்பட சத்துணவு ஊழியா்கள் பலா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.