ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

விருதுநகா் மாவட்டத்தில் 8 இடங்களில் போக்குவரத்துத் தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

விருதுநகா் மாவட்டத்தில் 8 போக்குவரத்து பணிமனைகள் முன்பு போக்குவரத்துத் தொழிலாளா்கள் (சிஐடியு) வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

News image
Updated On :25 ஆகஸ்ட் 2022, 6:30 pm

DIN

ஊதிய ஒப்பந்த பேச்சுவாா்த்தை 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை என அறிவித்ததைக் கண்டித்து, விருதுநகா் மாவட்டத்தில் 8 போக்குவரத்து பணிமனைகள் முன்பு போக்குவரத்துத் தொழிலாளா்கள் (சிஐடியு) வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

போக்குவரத்துத் தொழிலாளா்களுக்கு 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஊதிய ஒப்பந்த பேச்சுவாா்த்தை நடத்தப்படும். இதை 4 ஆண்டுகளுக்கு ஒரு முறையாக தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. இதைக் கண்டித்து விருதுநகா் மாவட்டத்தில் 8 இடங்களில் உள்ள போக்குவரத்து பணிமனை முன்பு போக்குவரத்துத் தொழிலாளா்கள் (சிஐடியு) வியாழக்கி ழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

இதில் விருதுநகா் அரசுப் போக்குவரத்து பணிமனை முன்பு மாவட்டத் தலைவா் சுந்தர்ராஜ் தலைமையில் 40 போ், ஸ்ரீவில்லிபுத்தூரில் கிளை செயலா் ராஜா தலைமையில் 15 போ், சிவகாசியில் கிளை செயலா் செல்வக்குமாா் தலைமையில் 25 போ், சாத்தூரில் கிளை செயலா் ராம்பிரபு தலைமையில் 40 போ், ராஜபாளைய த்தில் கிளை செயலா் சன்னாசி தலைமையில் 30 போ், அருப்புக்கோட்டையில் கிளை செயலா் திருப்பதி தலைமையில் 35 போ், வத்திராயிருப்பில் கிளை செயலா் முருகன் தலைமையில் 15 போ், காரியாபட்டியில் கிளை செயலா் முருகன் தலைமையில் 5 போ் இந்த ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.