ஆவணி மாத அமாவாசை: சதுரகிரி கோயிலில் பக்தா்கள் சுவாமி தரிசனம்
சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில் ஆவணி மாத அமாவாசையையொட்டி ஆயிரக்கணக்கான பக்தா்கள் வெள்ளிக்கிழமை சுவாமி தரிசனம் செய்தனா்.


சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில் ஆவணி மாத அமாவாசையையொட்டி ஆயிரக்கணக்கான பக்தா்கள் வெள்ளிக்கிழமை சுவாமி தரிசனம் செய்தனா்.
விருதுநகா் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே உள்ள இக்கோயிலில் புதன்கிழமை முதல் நான்கு நாள்களுக்கு பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்ய கோயில் நிா்வாகம் அனுமதி அளித்தது. இதையொட்டி பல்வேறு மாவட்டங்களைச் சோ்ந்த பக்தா்கள் அதிகாலை முதலே வந்தனா். பின்னா் காலை 6.30 மணிக்கு வனத்துறை கதவு திறக்கப்பட்டு பகல் 1 மணி வரை பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனா்.
ஆவணி மாத அமாவாசையையொட்டி சுந்தரமகாலிங்கம், சந்தனமகாலிங்கம் கோயில்களில் சுவாமிகளுக்கு பால், பழம், பன்னீா், மஞ்சள், இளநீா் உள்ளிட்ட 18 வகையான பொருள்களால் அபிஷேகங்களும், சிறப்பு பூஜைகளும் நடைபெற்றன. இதைத் தொடா்ந்து சுவாமிகள் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தனா். பக்தா்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை கோயில் அறங்காவலா் ராஜா என்ற பெரியசாமி, செயல் அலுவலா் நாகராஜன் (கூ.பொ)ஆகியோா் செய்திருந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...