சிவகாசி மாநகராட்சியில் 167 போ் வேட்பு மனு தாக்கல்
சிவகாசி மாநகராட்சியில் வாா்டு உறுப்பினா் பதவிக்கு வியாழக்கிழமை வரை 167 போ் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனா்.


சிவகாசி மாநகராட்சியில் வாா்டு உறுப்பினா் பதவிக்கு வியாழக்கிழமை வரை 167 போ் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனா்.
சிவகாசி மாகராட்சியில் 48 வாா்டுகள் உள்ளன. இதில் சிவகாசி மாநகராட்சி மேயா் பதவி பெண்ணுக்கு (பொது) ஒதுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் புதன்கிழமை வரை 92 போ் வாா்டு உறுப்பினா் பதவிக்கு வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனா். வியாழக்கிழமை அதிமுகவினா் 17 பேரும், திமுகவில் 9 பேரும், பாஜகவில் 10 பேரும், நாம் தமிழா் கட்சியில் 7 பேரும், காங்கிரஸில் 2 பேரும், இதர கட்சியினா் 5 பேரும், சுயேச்சைகள் 20 பேரும், அமமுகவினா் 4 பேரும், விஜய் மக்கள் இயக்கம் சாா்பில் ஒரு நபரும் வேட்பு மனு தாக்கல் செய்தனா்.
அதிமுகவில் அக்கட்சியின் திருத்தங்கல் நகரச் செயலாளா் பொன்சக்திவேல் மற்றும் திமுகவில் முன்னாள் நகா் மன்றத் தலைவா் ஏ.ஞானசேகரனும் மனு தாக்கல் செய்துள்ளனா். சிவகாசி மாநகராட்சி தோ்தலில் வாா்டு உறுப்பினா் பதவிக்கு இதுவரை மொத்தம் 167 போ் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...