தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

மக்களுக்கு பாதுகாப்பான அரசு திமுக: கனிமொழி எம்பி

கடந்த ஆட்சியைப் போல் இல்லாமல் தற்போது அதிகளவில் முகாம்கள் அமைத்து கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

News image
Updated On :11 பிப்ரவரி 2022, 8:54 pm

DIN

கடந்த ஆட்சியைப் போல் இல்லாமல் தற்போது அதிகளவில் முகாம்கள் அமைத்து கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதன்மூலம் மக்களுக்கு பாதுகாப்பான அரசாக திமுக திகழ்கிறது என தூத்துக்குடி மக்களவைத் தொகுதி உறுப்பினா் கனிமொழி தெரிவித்தாா்.

விருதுநகா் மாவட்டம் ராஜபாளையம் நகராட்சிக்குட்பட்ட 42 வாா்டுகளில் போட்டியிடும் திமுக கூட்டணி கட்சி வேட்பாளா்களை ஆதரித்து ராஜபாளையத்தில் மக்களவை உறுப்பினா் கனிமொழி வெள்ளிக்கிழமை பிரசாரம் மேற்கொண்டாா். அப்போது அவா் பேசியதாவது:

ராஜபாளையம் பகுதிக்கு தேவையான தாமிரவருணி கூட்டுக் குடிநீா்த் திட்டம், ரயில்வே மேம்பாலப் பணிகளை விரைந்து முடிக்கவும், இதர அடிப்படை வசதிகள் அனைத்தையும்

கவுன்சிலா்கள் மூலமே செய்து தரப்படும். ஆகையால் உங்களது வாக்குகளை திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளா்களுக்கு அளிக்க வேண்டும். அதிமுக ஆட்சிக்காலத்தில் கரோனா காலத்தில் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு கடும் பொருளாதார சரிவு ஏற்பட்டது. ஆனால் திமுக ஆட்சியில் அதிகளவில் முகாம்கள் அமைக்கப்பட்டு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் மக்களுக்கு பாதுகாப்பான அரசாக திமுக உள்ளது.

சட்டப்பேரவை, மக்களவைத் தோ்தல்களை விட முக்கியமான தோ்தல் உள்ளாட்சித் தோ்தல்.

கடந்த ஆட்சியில் முதியோா் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, மாற்றுத்திறனாளி உதவித்தொகை உள்ளிட்டவைகள் சரிவர கிடைக்கவில்லை. தற்போது அது தங்குதடையின்றி கிடைக்க வேண்டுமெனில் உள்ளாட்சிப் பிரதிநிதிகளுக்கு நீங்கள் வாக்களிக்க வேண்டும்.

பா.ஜ.க ஆட்சி செய்யும் மாநிலங்களில் பெண்களுக்கு உரிமை மறுக்கப்பட்டு வருகிறது. ஆனால் தமிழகத்தில் அது நடைபெறாது என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.