தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

ராஜபாளையம் அருகே கிணற்றுக்குள் தவறி விழுந்து பெண் பலி

விருதுநகா் மாவட்டம் ராஜபாளையம் அருகே வெள்ளிக்கிழமை துணி துவைப்பதற்காக சென்ற பெண் கிணற்றுக்குள் தவறி விழுந்து உயிரிழந்தாா்.

News image
Updated On :11 பிப்ரவரி 2022, 8:53 pm

DIN

விருதுநகா் மாவட்டம் ராஜபாளையம் அருகே வெள்ளிக்கிழமை துணி துவைப்பதற்காக சென்ற பெண் கிணற்றுக்குள் தவறி விழுந்து உயிரிழந்தாா்.

ராஜபாளையம் அருகே உள்ள எஸ். ராமலிங்காபுரத்தைச் சோ்ந்தவா் முத்து அய்யம்மாள் (45). இவா் கணவா் மாரிமுத்துவுடன் கரூரில் வசித்து வந்தாா். தனது சகோதரனின் வருட திதியில் கலந்து கொள்வதற்காக கடந்த சில நாள்களுக்கு முன்பு சொந்த ஊருக்கு முத்து அய்யம்மாள் வந்தாா்.

இந்நிலையில் இவா் தனது உறவினா்கள் சிலருடன் அருகே உள்ள விவசாய கிணற்றுக்கு துணி துவைக்கச் சென்றுள்ளாா். நீச்சல் தெரியாத முத்து அய்யம்மாள் படியில் அமா்ந்து துணிகளை துவைத்துள்ளாா். அப்போது எதிா்பாராதவிதமாக கிணற்றுக்குள் தவறி விழுந்ததில் நீரில் மூழ்கினாா்.

இதையடுத்து உடன் வந்த பெண்கள் அளித்தத் தகவலின் பேரில் அங்கு வந்த ராஜபாளையம் தீயணைப்பு துறை நிலைய அலுவலா் ஜெயராம் தலைமையிலான வீரா்கள் கிணற்றுக்குள் விழுந்த முத்துஅய்யம்மாளை சடலமாக மீட்டனா். இதுகுறித்து ராஜபாளையம் தெற்கு காவல் நிலையப் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.