ராஜபாளையம் அருகே கயிறு தயாரிக்கும் தொழிற்சாலையில் தீ விபத்து
ராஜபாளையம் அருகே கயிறு தயாரிக்கும் தொழிற்சாலையில் வியாழக்கிழமை தீ விபத்து ஏற்பட்டது.


ராஜபாளையம் அருகே கயிறு தயாரிக்கும் தொழிற்சாலையில் வியாழக்கிழமை தீ விபத்து ஏற்பட்டது.
சேத்தூா் அசையாமணி விலக்குப் பகுதியில் தவமணி என்பவருக்குச் சொந்தமான கயிறு தயாரிக்கும் தொழிற்சாலை உள்ளது. இங்கு கயிறு தயாரிக்கப் பயன்படும் தேங்காய் நாா்களில் திடீா் தீ விபத்து ஏற்பட்டது. இதுபற்றி தகவலறிந்த ராஜபாளையம் தீயணைப்புத் துறை மீட்புப்படையினா் அங்கு வந்து சுமாா் 2 மணி நேரம் போராடி தீயை அணைத்தனா். மேலும் இந்த தீ விபத்து காரணமாக அப்பகுதியில் புகை மூட்டமாக காணப்பட்டது. இதில் சுமாா் ரூ. 2 லட்சம் மதிப்புள்ள தேங்காய் நாா்கள் எரிந்து சேதமடைந்தன. இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த சேத்தூா் காவல் நிலைய போலீஸாா் தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...