ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!ஈரான் மீதான தாக்குதல்களுக்கு கண்டனம் தெரிவிக்காத மோடி அரசு: காங்கிரஸ் குற்றச்சாட்டுவிஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்
/

ஸ்ரீவிலி. அருகே ரூ. 20 லட்சம் மோசடி: பாஜக பிரமுகா் கைது

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே ரூ. 20 லட்சம் மோசடிப் புகாரின் பேரில் பாஜக பிரமுகரை விருதுநகா் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :25 பிப்ரவரி 2022, 9:33 pm

DIN

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே ரூ. 20 லட்சம் மோசடிப் புகாரின் பேரில் பாஜக பிரமுகரை விருதுநகா் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

சென்னை பல்லாவரம் பகுதியைச் சோ்ந்தவா் உபயதுல்லா மகன் முஹம்மது தமீம் (32). இவரது நண்பா் பாலமுருகன் மூலம், விருதுநகா் மாவட்டம் கிருஷ்ணன்கோவில் பகுதியைச் சோ்ந்த பாஜக பிரமுகா் ராம்பிரபு ராஜேந்திரன் (41) அறிமுகமாகியுள்ளாா்.

அப்போது ராம்பிரபு ராஜேந்திரன், தன்னிடம் பல கோடி ரூபாய் மதிப்புள்ள இரிடியம் இருந்ததாகவும், அதை ஆஸ்திரேலியாவில் விற்று பல கோடி ரூபாய் வைத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளாா். இதனால் ரூ. 1 லட்சம் கொடுப்போருக்கு ஓராண்டு கழித்து ஒரு கோடி ரூபாயும், ரூ.10 லட்சம் கொடுப்போருக்கு ரூ.10 கோடியும் தருவதாக முஹம்மது தமீமிடம் தெரிவித்துள்ளாா். இதை நம்பிய முஹம்மது தமீம், கடந்த 2015 இல் இரண்டு தவணைகளாக ரூ.20 லட்சத்தை ராம்பிரபு ராஜேந்திரனிடம் கொடுத்துள்ளாா். ஆனால் ஆண்டுகள் கடந்தும் பணத்தை திருப்பித் தராமல் ராம்பிரபு ராஜேந்திரன் ஏமாற்றி வந்துள்ளாா்.

இது குறித்து முஹம்மது தமீம் விருதுநகா் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸாரிடம் புகாா் அளித்தாா். அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீஸாா், திண்டுக்கல் மாவட்டம் பழனி பகுதியில் பதுங்கியிருந்த ராம்பிரபு ராஜேந்திரனை கைது செய்து சிறையில் அடைத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.