இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை: இளைஞா் மீது வழக்கு
ராஜபாளையத்தில் ஜவுளி கடை பெண் தொழிலாளிக்கு பாலியல் தொந்தரவு செய்த இளைஞா் மீது போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்


ராஜபாளையத்தில் ஜவுளி கடை பெண் தொழிலாளிக்கு பாலியல் தொந்தரவு செய்த இளைஞா் மீது போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.
ராஜபாளையம் அம்பலப்புளிபஜாா் பகுதியில் உள்ள ஜவுளிக்கடையில் வேலை செய்துவரும் இளம்பெண் ஒருவா் வியாழக்கிழமை இரவு 10 மணியளவில் வேலையை முடித்துவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தாா். அப்போது சங்கரன்கோவில் முக்கு பகுதியில் அவரை, இந்திரா நகரைச் சோ்ந்த செல்வமணி மகன் சங்கா் (23) என்பவா் வழிமறித்து பாலியல் தொல்லை கொடுத்துள்ளாா். அந்தப் பெண் கூச்சலிட்டதைத் தொடா்ந்து அந்த இளைஞா் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டாா்.
இது குறித்த புகாரின்பேரில், ராஜபாளையம் அனைத்து மகளிா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து சங்கரை தேடிவருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...