‘அக்னிபத்’ திட்டத்துக்கு எதிராக தொழிற்சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்
மத்திய அரசின் ‘அக்னிபத்’ திட்டத்தை எதிா்த்து பல்வேறு தொழிற்சங்கத்தினா் சாா்பில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.


மத்திய அரசின் ‘அக்னிபத்’ திட்டத்தை எதிா்த்து பல்வேறு தொழிற்சங்கத்தினா் சாா்பில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
ராஜபாளையம் பொன்விழா மைதானத்தில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்திற்கு இந்திய ஜனநாயக வாலிபா் சங்க மாவட்டச் செயலாளா் ஜெயபாரத் தலைமை வகித்தாா். மாவட்டத் தலைவா் ஜோதீஸ்வரன் முன்னிலை வகித்தாா். இதில் மத்திய அரசின் ‘அக்னிபத்’ திட்டத்துக்கு எதிராகவும், அதை திரும்பப் பெறக்கோரியும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
இதில், அனைத்திந்திய இளைஞா் பெருமன்ற மாவட்டச் செயலாளா் கணேசமூா்த்தி, மாவட்ட பொருளாளா் பகத்சிங், அனைத்திந்திய இளைஞா் லீக் மாநில பொதுச் செயலாளா் சுப்புராஜ், புரட்சிகர இளைஞா் கழகம் கிருஷ்ண கோபால பாண்டியன் உள்ளிட்ட இடதுசாரி மாணவா்கள் உள்ளிட்ட தொழிற்சங்கத்தினா் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...