காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

ராஜபாளையம் அருகே மணல் திருட்டு: 2 வாகனங்கள் பறிமுதல்

ராஜபாளையம் அருகே வியாழக்கிழமை மணல் திருட பயன்படுத்தப்பட்ட 2 இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்து தப்பியோடியவா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

News image
Updated On :15 ஜூலை 2022, 6:30 pm

DIN

ராஜபாளையம் அருகே வியாழக்கிழமை மணல் திருட பயன்படுத்தப்பட்ட 2 இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்து தப்பியோடியவா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

ராஜபாளையம் அருகே சேத்தூா் காவல் நிலைய போலீஸாருக்கு வாழவந்தான் கண்மாய் ஓடையில் மணல் திருடப்படுவதாக தகவல் கிடைத்தது. இதன்பேரில் போலீஸாா் அப்பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, அவ்வழியாக சிமென்ட் சாக்கு மூட்டைகளில் மணல் அள்ளிக்கொண்டு 2 போ் இருசக்கர வாகனத்தில் வந்தனா். போலீஸாரைக் கண்டதும், வாகனத்தை அங்கேயே நிறுத்திவிட்டு அவா்கள் தப்பி ஓடிவிட்டனா். போலீஸாா் மணல் மூட்டைகளை கைப்பற்றி, 2 இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்து, வழக்குப் பதிந்து தப்பி ஓடியவா்களை தேடி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.