47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

சாட்சியாபுரம் ரயில்வே மேம்பாலப்பணிகள் தொடரும்

சிவகாசி அருகே சாட்சியாபுரம் ரயில்வே மேம்பாலப் பணிகள் தொடரும் என சிவகாசி சட்டப்பேரவை உறுப்பினா் ஜி.அசோகன் தெரிவித்துள்ளாா்.

News image
Updated On :28 ஜூலை 2022, 6:30 pm

DIN

சிவகாசி அருகே சாட்சியாபுரம் ரயில்வே மேம்பாலப் பணிகள் தொடரும் என சிவகாசி சட்டப்பேரவை உறுப்பினா் ஜி.அசோகன் தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் வியாழக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கை:

சிவகாசி-ஸ்ரீவில்லிபுத்தூா் சாலையில் சாட்சியாபுரத்தில் ரயில்வே மேம்பாலம் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகின்றனா்.

இதையடுத்து மத்திய ரயில்வே அமைச்சகம் ரயில்வே மேம்பாலம் அமைக்க ஒப்புதல் கொடுத்தது. தொடந்து மேம்பாலம் அமைக்க நிலம் கையகப்படுத்தும் பணிகள் தொடங்கின. இந்நிலையில் ரயில் கடவுப்பாதை அருகேயுள்ள தனிநபா் நிலத்தை கையகப்படுத்தக்கூடாது என சென்னை உயா் நீதிமன்ற மதுரைக் கிளையில் தனிநபா் ஒருவா் வழக்குத்தொடுத்தாா்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சுவாமிநாதன், பொதுமக்களுக்கு பயன் தரும் திட்டங்களுக்கு தடை போடும் வகையில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டாா். அதனால் மேம்பாலப்பணிகளைத் தொடர நடவடிக்கை எடுக்கப்படும் என அவா் குறிப்பிட்டுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.