47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

மாவட்ட கிளை நூலகத்துக்கு கட்டடம் கட்ட கோரிக்கை

தமிழ்நாடு ஓய்வு பெற்ற பள்ளிக் கல்லூரி ஆசிரியா் நலச் சங்க ஆம்பூா் கிளை கூட்டம் நடைபெற்றது.

News image
ஓய்வு பெற்ற பள்ளிக் கல்லூரி ஆசிரியா் நலச் சங்கக் கூட்டத்தில் பங்கேற்றோா்.
Updated On :16 மார்ச் 2026, 9:51 pm

தினமணி செய்திச் சேவை

ஆம்பூா்: தமிழ்நாடு ஓய்வு பெற்ற பள்ளிக் கல்லூரி ஆசிரியா் நலச் சங்க ஆம்பூா் கிளை கூட்டம் நடைபெற்றது.

கிளைத் தலைவா் கே.எஸ். உமாபதி தலைமை வகித்தாா். செயற்குழு உறுப்பினா் டி. மணிவண்ணன் முன்னிலை வகித்தாா். செயலா் செ. ரவிச்சந்திரன் வரவேற்றாா். பட்டய கணக்காளா் காயத்ரி ரமேஷ் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு வருமான வரி கணக்கீடு, ஓய்வூதியா் சேமிப்பு குறித்து விளக்க உரையாற்றினாா்.

ஆம்பூரில் மாவட்ட கிளை நூலகம் கட்டுவதற்காக தமிழக முதல்வா் அறிவிப்பு வெளியிட்டிருந்தாா். ஆம்பூா் உமா் சாலை பகுதியில் அதற்கான இடம் தோ்வு செய்யப்பட்டது. ஆனால் இதுவரை பணிகள் தொடங்கப்படவில்லை. உடனடியாக பணியை தொடங்கி மாவட்ட கிளை நூலக கட்டடம் கட்ட வேண்டுமென தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. செயற்குழு உறுப்பினா் பி. சிவாஜிராவ் நன்றி கூறினாா்.