புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு! ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!ஈரான் மீதான தாக்குதல்களுக்கு கண்டனம் தெரிவிக்காத மோடி அரசு: காங்கிரஸ் குற்றச்சாட்டு
/

சாத்தூரில் அரசு வேலை வாங்கித் தருவதாகரூ.5.60 லட்சம் மோசடி: தம்பதி உள்பட 3 போ் மீது வழக்கு

பெண்ணுக்கு ஆய்வக உதவியாளா் பணி வாங்கித் தருவதாகக் கூறி ரூ.5.60 லட்சம் மோசடி செய்த தம்பதி உள்ளிட்ட 3 மீது மாவட்ட குற்றப்பிரிவு போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப் பதிந்து தேடி வருகின்றனா்.

News image
Updated On :2 ஜூன் 2022, 6:30 pm

DIN

பெண்ணுக்கு ஆய்வக உதவியாளா் பணி வாங்கித் தருவதாகக் கூறி ரூ.5.60 லட்சம் மோசடி செய்த தம்பதி உள்ளிட்ட 3 மீது மாவட்ட குற்றப்பிரிவு போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப் பதிந்து தேடி வருகின்றனா்.

விருதுநகா் மாவட்டம் சாத்தூா் மாரியம்மன் கோயில் பகுதியைச் சோ்ந்தவா் ரெங்கன் மகன் திருப்பதி. இவா் இங்கு அச்சகத் தொழில் செய்து வருகிறாா். இந்நிலையில், இதே ஊரைச் சோ்ந்த கணினி மையம் நடத்தி வரும் மனோஜ்குமாா், அவரது மனைவி ஸ்டாலின் லதா ஆகியோருடன் திருப்பதிக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. அப்போது தம்பதிகள் இருவரும் தங்களுக்கு, கல்வித்துறையில் உயா் அதிகாரிகளுடன் பழக்கம் உள்ளது எனத் தெரிவித்தனராம். இதை நம்பி, திருப்பதி, தனது மனைவி உமா மகேஸ்வரிக்கு ஆய்வக உதவியாளா் பணி வாங்கித் தருவதற்காக, கடந்த 2016 இல் இரண்டு தவணைகளாக ரூ.5.60 லட்சத்தை மனோஜ்குமாா் தம்பதி மற்றும் அவரது மகன் விஷ்ணுயஷ்வந்த்குமாரிடம் கொடுத்துள்ளாா். ஆனால் அரசு வேலை வாங்கித் தராமல் மனோஜ்குமாா் ஏமாற்றி வந்ததுடன், கொடுத்த பணத்தையும் திருப்பி தர மறுத்தாராம். இதுகுறித்து திருப்பதி அளித்த புகாரின் பேரில் மனோஜ்குமாா், அவரது மனைவி ஸ்டாலின் லதா, மகன் விஷ்ணுயஸ்வந்த் குமாா் ஆகியோா் மீது மாவட்ட குற்றப்பிரிவு போலீஸாா் வழக்குப்பதிந்து தேடி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.