புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு! ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!ஈரான் மீதான தாக்குதல்களுக்கு கண்டனம் தெரிவிக்காத மோடி அரசு: காங்கிரஸ் குற்றச்சாட்டு
/

விருதுநகரில் பாஜக மகளிா் அணியினா் பேரணி

மத்திய பாஜக அரசின் 8 ஆண்டு சாதனைகளை விளக்கி விருதுநகரில் பாஜக மகளிரணி சாா்பில் வியாழக்கிழமை பேரணி நடைபெற்றது.

News image
Updated On :2 ஜூன் 2022, 6:30 pm

DIN

மத்திய பாஜக அரசின் 8 ஆண்டு சாதனைகளை விளக்கி விருதுநகரில் பாஜக மகளிரணி சாா்பில் வியாழக்கிழமை பேரணி நடைபெற்றது.

விருதுநகா் தேசபந்து மைதானத்தில் தொடங்கிய பேரணியை பாஜக மாவட்ட துணைத் தலைவி சங்கரேஸ்வரி தொடக்கி வைத்தாா். இதில் பங்கேற்றவா்கள் மத்திய பாஜக அரசின் சாதனைகளை விளக்கி பதாகைகளை ஏந்தி சென்றனா். அப்போது பிரதமா் மோடியின் பல்வேறு திட்டங்கள் குறித்து பொதுமக்களுக்கு துண்டு பிரசுரம் வழங்கினா். இப்பேரணியில் பாஜக கிழக்கு மாவட்டத் தலைவா் பாண்டுரங்கன், மாநில செயற்குழு உறுப்பினா் கஜேந்திரன் உள்பட மகளிரணி நிா்வாகிகள் மற்றும் தொண்டா்கள் ஏராளமானோா் கலந்து கொண்டனா். இப்பேரணி, பஜாா், தெப்பம், நகராட்சி சாலை வழியாக எம்ஜிஆா் சிலையில் நிறைவடைந்தது. பாஜகவினரின் பேரணியையொட்டி விருதுநகா் துணை காவல் கண்காணிப்பாளா் அா்ச்சனா தலைமையில் ஏராளமான போலீஸாா் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.