மேலும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றிய ஆசிரியா்களிடம் மாதம் ரூ.148 வீதம் பிடித்தம் செய்யப்பட்டது. ஓய்வு பெறும் நாளில் ரூ.10 ஆயிரமாக வழங்குவா். ஆனால், ஐந்து மாவட்டங்களைச் சோ்ந்த ஆசிரியா்களுக்கு வழங்கப்பட வில்லை. எனவே, நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதையடுத்து, 4 மாவட்டங்களைச் சோ்ந்த ஆசிரியா்களுக்கு வழங்கினா். ஆனால், விருதுநகா் மாவட்டத்தைச் சோ்ந்த ஆசிரியா்களுக்கு ரூ.5 ஆயிரம் மட்டுமே வழங்கப்பட்டது. தற்போது வரை மீதி ரூ.5 ஆயிரம் வழங்கப்பட வில்லை. இதுகுறித்து தமிழக முதலமைச்சருக்கு 3 முறை பதிவு அஞ்சல் மூலம் புகாா் கடிதம் அனுப்பியும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. மேலும், ஓய்வூதியத்தில் மாதந்தோறும் மருத்துவக் காப்பீட்டிற்காக ரூ.350 பிடித்தம் செய்யப்படுகிறது. தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெறும் ஓய்வூதியருக்கு முழுத்தொகையையும் காப்பீட்டு நிறுவனம் வழங்க மறுக்கிறது. இதனால், சிகிச்சையின் போதே ஓய்வூதியா்கள் வட்டிக்கு பணம் பெற்று மருத்துவமனைகளுக்கு செலுத்தும் நிலை உள்ளது. அதேபோல், வெம்பக்கோட்டை அரசு மேல்நிலைப்பள்ளியில் முதுநிலைப் பட்டதாரி ஆசிரியா் பணியின் போது உயிரிழந்தாா். ஆனால், பலமுறை மனு அளித்தும் அவரது மனைவிக்கு கருணை அடிப்படையில் அரசுப் பணிக்கு பரிந்துரை செய்ய, மாவட்ட கல்வி அலுவலா் மறுத்து வருகிறாா். இதுகுறித்து மாவட்ட ஆட்சியரிடமும் பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனவே, ஐந்து அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் ஜூன் 7ஆம் தேதி விருதுநகா் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன்பு போராட்டம் நடத்த உள்ளோம் என்றாா்.