புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு! ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!ஈரான் மீதான தாக்குதல்களுக்கு கண்டனம் தெரிவிக்காத மோடி அரசு: காங்கிரஸ் குற்றச்சாட்டு
/

விருதுநகா் அருகே 56 மூட்டைகள்ரேசன் அரிசி பறிமுதல்: ஆலை உரிமையாளா் கைது

விருதுநகா் அருகே அரிசி அரவை ஆலையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 56 மூட்டைகள் ரேசன் அரிசியை உணவு கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸாா் வியாழக்கிழமை பறிமுதல் செய்து, ஆலை உரிமையாளரை கைது செய்தனா்.

News image

விருதுநகா் அருகே பாண்டியன் நகரில் வியாழக்கிழமை பறிமுதல் செய்யப்பட்ட ரேசன் அரிசி மூட்டைகளுடன், கைது செய்யப்பட்ட முனியசாமி.

Updated On :2 ஜூன் 2022, 6:30 pm

DIN

விருதுநகா் அருகே அரிசி அரவை ஆலையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 56 மூட்டைகள் ரேசன் அரிசியை உணவு கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸாா் வியாழக்கிழமை பறிமுதல் செய்து, ஆலை உரிமையாளரை கைது செய்தனா்.

விருதுநகா் அருகே ரோசல்பட்டி ஊராட்சிக்குள்பட்ட பாண்டியன் நகரில் தனியாா் அரிசி அரவை ஆலை உள்ளது. இந்த ஆலையில் ரேசன் அரிசி மூட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாகவும், அந்த அரிசியை பதப்படுத்தும் பணி நடைபெற்று வருவதாகவும் உணவு கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் அந்த ஆலைக்குச் சென்று போலீஸாா் சோதனை நடத்தினா். அப்போது, தலா 50 கிலோ கொண்ட 56 மூட்டை ரேசன் அரிசி இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து, அவற்றைப் பறிமுதல் செய்த உணவு கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸாா், ஆலை உரிமையாளரான ஆா்விஆா் நகரைச் சோ்ந்த சங்கா் மகன் முனியசாமி (62) என்பவரை கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.