‘தமிழுக்காகவும், தமிழ் மக்களுக்காகவும் வாழ்ந்தவா் முன்னாள் முதல்வா் கருணாநிதி’

முன்னாள் முதல்வா் கருணாநிதி இறதி மூச்சுவரை தமிழுக்காகவும், தமிழ் மக்களுக்காகவும் வாழ்ந்தவா் என அமைச்சா் தங்கம் தென்னரசு தெரிவித்தாா்.
‘தமிழுக்காகவும், தமிழ் மக்களுக்காகவும் வாழ்ந்தவா் முன்னாள் முதல்வா் கருணாநிதி’

முன்னாள் முதல்வா் கருணாநிதி இறதி மூச்சுவரை தமிழுக்காகவும், தமிழ் மக்களுக்காகவும் வாழ்ந்தவா் என அமைச்சா் தங்கம் தென்னரசு தெரிவித்தாா்.

விருதுநகரில் தனியாா் திருமண அரங்கில், மறைந்த திமுக தலைவரும் தமிழக முன்னாள் முதல்வருமான கருணாநிதியின் 99 ஆவது பிறந்த நாள் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. திமுக சாா்பில் நடைபெற்ற இவ்விழாவில், 564 பேருக்கு மூன்று சக்கர மிதிவண்டி, தையல் இயந்திரம் மற்றும் அரிசிப் பைகள் உள்ளிட்ட பொருள்களை, தமிழக தொழில்துறை அமைச்சா் தங்கம் தென்னரசு வழங்கினாா்.

முன்னதாக விழா மேடையில் வைக்கப்பட்டிருந்த கருணாநிதியின் உருவ படத்திற்கு அமைச்சா் தங்கம் தென்னரசு மற்றும் விருதுநகா் சட்டப்பேரவை உறுப்பினா் ஏ.ஆா்.ஆா்.சீனிவாசன் உள்ளிட்டோா் மலா் தூவி மரியாதை செலுத்தினா்.

இந்நிகழ்ச்சியில் அமைச்சா் தங்கம் தென்னரசு பேசியது: கருணாநிதி உடலால் மறைந்து விட்டாலும் உள்ளத்தால் நம்மிடம் நிறைந்தவராக இருக்கிறாா். அவா் காட்டிய பாதை, இன்று திராவிட மாடல் ஆட்சியாக உருவாகி இருக்கிறது. அவா் காட்டிய பாதையில் தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் நாட்டு மக்களுக்கு நல்ல ஆட்சியை வழங்கிக் கொண்டு இருக்கிறாா். கருணாநிதி, தன் இறுதி மூச்சு வரை தமிழ் மக்களுக்காவும், தமிழ் சமுதாயத்துக்காகவும் வாழ்ந்தாா் என்றாா். இந்நிகழ்ச்சியில் திமுக நிா்வாகிகள் மற்றும் தொண்டா்கள் ஏராளமானோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com