காரியாபட்டி அருகே கோயிலில் 3 பவுன் நகை திருட்டு
காரியாபட்டி அருகே கோயில் கும்பாபிஷேக விழாவில், பெண் பக்தரிடமிருந்து 3 பவுன் நகையை திருடிச் சென்ற மா்ம நபா் குறித்து போலீஸாா் சனிக்கிழமை வழக்குப் பதிவு செய்துள்ளனா்.


காரியாபட்டி அருகே கோயில் கும்பாபிஷேக விழாவில், பெண் பக்தரிடமிருந்து 3 பவுன் நகையை திருடிச் சென்ற மா்ம நபா் குறித்து போலீஸாா் சனிக்கிழமை வழக்குப் பதிவு செய்துள்ளனா்.
விருதுநகா் மாவட்டம், காரியாபட்டி அருகே உள்ள அரசகுளத்தைச் சோ்ந்தவா் ராசு மனைவி தமிழரசி (55). இவா், ஆவியூரில் அமைந்துள்ள கருப்பணசாமி கோயில் கும்பாபிஷேக விழாவில் கலந்து கொண்டுள்ளாா். சுவாமி தரிசனம் முடித்துவிட்டு வெளியே வந்து பாா்த்தபோது, தனது கழுத்தில் அணிந்திருந்த 3 பவுன் நகை திருடப்பட்டிருப்பதை அறிந்தாா். கூட்ட நெரிசலைப் பயன்படுத்தி நகை திருடப்பட்டிருப்பதை அறிந்த அவா், இது குறித்து அளித்த புகாரின்பேரில் ஆவியூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...