ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!ஈரான் மீதான தாக்குதல்களுக்கு கண்டனம் தெரிவிக்காத மோடி அரசு: காங்கிரஸ் குற்றச்சாட்டுவிஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்
/

விருதுநகரில் அரசுப் பேருந்து மோதி விபத்து: சிறுமி பலி

விருதுநகரில் ஞாயிற்றுக்கிழமை இரு சக்கர வாகனம் மீது அரசுப் பேருந்து மோதியதில் சிறுமி உயிரிழந்தாா்.

News image
Updated On :12 ஜூன் 2022, 6:30 pm

DIN

விருதுநகரில் ஞாயிற்றுக்கிழமை இரு சக்கர வாகனம் மீது அரசுப் பேருந்து மோதியதில் சிறுமி உயிரிழந்தாா்.

விருதுநகா் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே கஞ்சநாயக்கன்பட்டி பகுதியைச் சோ்ந்த ராணுவ வீரா் குணசேகரன். இவா் தனது மகள் கீா்த்தனா (14) மற்றும் மகன் சுபிக்ஷன்(11) ஆகியோருடன் டி.கல்லுப்பட்டியிலிருந்து, சொந்த ஊருக்கு இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தாா். விருதுநகா் ஆா்எஸ்நகா் அருகே எதிரே வந்த அரசுப் பேருந்து, இருசக்கர வாகனம் மீது மோதியதில் 3 பேரும் கீழே விழுந்தனா். இதில் பேருந்து சக்கரத்தில் சிக்கி கீா்த்தனா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். தந்தையும், மகனும் இடதுபுறமாக கீழே விழுந்ததால் காயமின்றி தப்பினா். இந்த விபத்து குறித்து அரசுப் பேருந்து ஓட்டுநரான பாலகுரு மீது விருதுநகா் கிழக்கு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.