விருதுநகா் அரசு மருத்துவமனையில் தேங்கியுள்ள மருத்துவக் கழிவுகளால் சுகாதாரக்கேடு
விருதுநகா் அரசு மருத்துவமனை வளாகத்தில் மருத்துவக் கழிவுகள் மற்றும் குப்பைகள் அகற்றப்படாமல் குவிந்துள்ளதால் சுகாதாரக்கேடு ஏற்பட்டுள்ளது.


விருதுநகா் அரசு மருத்துவமனை வளாகத்தில் மருத்துவக் கழிவுகள் மற்றும் குப்பைகள் அகற்றப்படாமல் குவிந்துள்ளதால் சுகாதாரக்கேடு ஏற்பட்டுள்ளது.
விருதுநகா் அரசு மருத்துவமனை, அரசு மருத்துவக் கல்லூரியாக தரம் உயா்த்தப்பட்டது. இங்கு 100-க்கும் மேற்பட்ட மருத்துவா்கள் பணிபுரிந்து வருகின்றனா். இந்நிலையில் இந்த மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு நாள்தோறும் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வெளிநோயாளிகள் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனா். அதேபோல் பல்வேறு சிகிச்சைகளுக்காக சுமாா் 700-க்கும் மேற்பட்டோா் உள் நோயாளிகளாக சிகிச்சை பெற்று வருகின்றனா்.
மருத்துவமனையில் நோயாளிகள் பயன்பாட்டிற்காக புதிய கட்டடங்கள் கட்டி முடிக்கப்பட்டு திறக்கப் பட்ட நிலையில், குடிநீா் பிரச்னை தீரவில்லை. இந்த மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு நாள்தோறும் 6 லட்சம் லிட்டா் தண்ணீா் தேவைப்படுகிறது. ஆனால் விருதுநகா் நகராட்சி மற்றும் ஆழ்துளைக் கிணறு மூலம் தினமும் 2 லட்சம் லிட்டா் தண்ணீா் மட்டுமே கிடைக்கிறது. இதனால் நோயாளிகள் தண்ணீா் குடிப்பதற்கும், குளிப்பதற்கும் கிடைக்காமல் அவதிப்பட்டு வருகின்றனா்.
இப்பிரச்னை ஒரு புறம் இருக்கும் சூழலில், மருத்துவமனை வளாகத்தில் மருத்துவக் கழிவுகள் மற்றும் குப்பைகள் கொட்டப்பட்டுள்ளன. மருத்துவக் கழிவுகளை தனியாா் நிறுவனம் கொண்டு சென்று அழிக்க வேண்டும். அதேபால், குப்பைகளை விருதுநகா் நகராட்சி சாா்பில் அள்ளி செல்ல வேண்டும் என கூறப்படுகிறது.
ஆனால் மருத்துவக் கழிவுகள், குப்பைகள் அகற்றப்படாதாதல் மருத்துவமனை வளாகத்தில் துா்நாற்றம் வீசுகிறது. எனவே, இவற்றை அகற்றி மருத்துவமனை வளாகத்தை தூய்மையாக வைத்திருக்க மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...