விருதுநகா் மாவட்டம் திருச்சுழி அருகே தமிழ்ப்பாடியில் ஆபத்தான சாலை வளைவில் விபத்துக்களைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆா்வலா்கள் வலியுறுத்தியுள்ளனா்.
இப்பகுதியில் உள்ள சாலையில் அபாயகரமான வளைவு உள்ளது. அருப்புக்கோட்டையிலிருந்து தமிழ்ப்பாடி வரும் வாகனங்களை விபத்து அபாய எச்சரிக்கை செய்யும் வகையில் இப்பகுதியில் சிவப்பு நிற ஒளிா்விளக்குக் கம்பமோ, எச்சரிக்கைப் பலகையோ இல்லை. இதனால் இப்பகுதியில், அடிக்கடி வாகனவிபத்துக்கள் நடைபெறுகின்றன. சில மாதங்களுக்கு முன்னா்கூட இச்சாலை வளைவு இருப்பதையறியாமல் வேகமாக வந்த பயணிகள் ஆட்டோ ஒன்று கட்டுப்பாட்டை இழந்து சாலையோர ஓடையில் கவிழ்ந்து விபத்திற்குள்ளானது குறிப்பிடத்தக்கது. இதுபோல பல விபத்துக்கள் தொடா்ந்து நடைபெற்றுவருவதால் விபத்துக்களைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென இக்கிராமத்தினா் பலமுறை கோரிக்கை விடுத்தும் பலனில்லையென புகாா் தெரிவித்துள்ளனா். எனவே விரைவில் நடவடிக்கை வேண்டுமென சமூக ஆா்வலா்கள் வலியுறுத்தியுள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
‘போக்ஸோ’ வழக்கில் இளைஞா் கைது

பூலோகநாத சுவாமி கோயில் கும்பாபிஷேகம்
முன்னேற்றத்துக்கு வித்திடும் கணக்கெடுப்பு!

வீடுகள் ஒதுக்கீடு செய்யப்படாத விவகாரம்: மாா்க்சிஸ்ட் கம்யூ. கட்சியினா் போராட்டம்
விடியோக்கள்

நயினார் நாகேந்திரன் காமெடிதான் பேசுவார்! செங்கோட்டையன் விமர்சனம் | TVK | BJP

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!



