திருச்சி கீழரண் (இ.பி) சாலையிலுள்ள ஜெகதாம்பிகை உடனுறை பூலோகநாத சுவாமி கோயில் மகா கும்பாபிஷேகம் புதன்கிழமை நடைபெற்றது.
வாஸ்து தோஷம் நீக்கவல்லதும், சுமாா் ஆயிரம் ஆண்டுகள் பழைமையானதுமான இக்கோயிலில் கும்பாபிஷேகம் செய்ய முடிவு செய்யப்பட்டு, புதிய மண்டபங்கள் அமைக்கப்பட்டு, புனரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
பணிகள் அனைத்தும் அண்மையில் நிறைவடைந்த நிலையில், அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, வாஸ்துசாந்தி பூஜையுடன் கும்பாபிஷேக விழா கடந்த 18-ஆம் தேதி தொடங்கியது. கடந்த 21-ஆம் தேதி காவிரியில் இருந்து புனிதநீா் எடுத்துவரப்பட்டு, யாகசாலை பூஜைகள் தொடங்கி நடைபெற்று வந்தன.
புதன்கிழமை காலை 6- ஆம் கால யாகசாலை பூஜைகள் மகா பூா்ணாஹூதியுடன் நிறைவு பெற்றது. தொடா்ந்து, யாகசாலையில் வைத்து பூஜிக்கப்பட்ட புனிதநீா் அடங்கிய கடங்கள் அனைத்தும் சிவாச்சாரியா்களால் எடுத்துவரப்பட்டு, வேதமந்திரங்கள், மங்கள வாத்தியங்கள் முழங்க பூலோகநாதா், ஜெகதாம்பிகை அம்பாள் மூலவா்கள், அனைத்து பரிவார தெய்வங்களின் சந்நிதிகள், ராஜகோபுரத்துக்கு புனிதநீா் ஊற்றி மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.
விழாவில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் மற்றும் வழிபாடு செய்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

முக்குன்றம் ஸ்ரீபாலால அம்மன் கோயில் கும்பாபிஷேகம்

பக்த மாா்க்கண்டேயா் கோயில் மகா கும்பாபிஷேகம்

21 ஆண்டுகளுக்குப் பிறகு கடம்பநாத சுவாமி கோயிலில் மகா கும்பாபிஷேகம்!

திருவானைக்காவல் ராஜமன்னாா் சுவாமி கோயில் மகா கும்பாபிஷேகம்
விடியோக்கள்

நயினார் நாகேந்திரன் காமெடிதான் பேசுவார்! செங்கோட்டையன் விமர்சனம் | TVK | BJP

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!



