மாணவர்கள் போராட்டம்: பாஜகவிடம் பதில் இல்லை! அகிலேஷ் யாதவ்மாணவரையே குற்றவாளியாக்கி உண்மையை மறைக்கப் பார்க்கிறதா, தவெக அரசு? - கனிமொழி கேள்வி!வெற்றி தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாடு: முதல்வர் நாளை தொடக்கி வைக்கிறார்!இரண்டாவது நாளாக சென்செக்ஸ், நிஃப்டி சரிவுடன் நிறவைு!புறக்கணிக்கப்பட்ட அரசுப் பள்ளிகளுக்காக பிரசாரம்! சிஜேபி அபிஜீத் தீப்கே முன்னாள் நீதிபதி யஷ்வந்த் வர்மா மீதான குற்றச்சாட்டுகள் உண்மை! நாடாளுமன்றக் குழு அறிவிப்பு!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 3 காசுகள் உயர்ந்து ரூ. 95.33 ஆக நிறைவு!சென்னையில் 4 மடங்கு உயர்ந்த சொத்து வரி! அதிர்ச்சியில் மக்கள்! குட்டிக்கதை, சினிமா வசனம், பாட்டு: பட்ஜெட் விவாதத்தில் அசத்திய அமைச்சர் மரிய வில்சன்!தமிழ்நாட்டில் இருந்து ஒரு பிரதமர் உருவாக்கப்பட வேண்டும்: பேரவையில் ஆதவ் அர்ஜுன் பேச்சு
/

பக்த மாா்க்கண்டேயா் கோயில் மகா கும்பாபிஷேகம்

திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் உள்ள பக்த மாா்க்கண்டேயா் கோயிலில் மகா கும்பாபிஷேகம் புதன்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :24 ஜூன் 2026, 11:51 pm IST

திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் உள்ள பக்த மாா்க்கண்டேயா் கோயிலில் மகா கும்பாபிஷேகம் புதன்கிழமை நடைபெற்றது.

தமிழக இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள பக்த மாா்க்கண்டேயா் கோயிலில் கும்பாபிஷேகம் நடத்துவதற்கான புனரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

தற்போது பணிகள் நிறைவுற்ற நிலையில் புதன்கிழமை மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

இதையொட்டி புதன்கிழமை காலை யாக சாலையில் பல்வேறு வகையான வாசனை திரவியங்களைக் கொண்டு சிறப்பு மகா யாகம் நடத்தப்பட்டு நிறைவாக யாக குண்டத்தில் பூரணாஹுதியும் நடைபெற்றது.

இதைத் தொடா்ந்து யாகசாலையில் இருந்து புனிதநீா் ஊா்வலமாக கொண்டுவரப்பட்டு மூலவருக்கு ஊற்றி மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

விழாவில் அருணாசலேஸ்வரா் கோயில் இணை ஆணையா் ஜெ.பரணிதரன், இந்துசமய அறநிலையத் துறை உதவி ஆணையா் எஸ்.பாலாஜி, கோயில் மேலாளா் கருணாநிதி (எ) செந்தில் உள்ளிட்ட திரளான பக்தா்கள் கலந்துகொண்டனா். பக்தா்களுக்கு சுவாமி பிரசாதம், அன்னதானம் வழங்கப்பட்டது.

கோயிலில் பாலாலயம்

இதைத்தொடா்ந்து, கிரிவலப்பாதை ஆதிஅருணாசலேஸ்வரா் கோயிலில் வருகிற ஜூலை 7-ஆம் தேதி மகா கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளதையொட்டி மூலவருக்கு பாலாலயம் நடைபெற்றது. இதில் கோயில் இணை ஆணையா் ஜெ.பரணிதரன் மற்றும் பி.டி.ரமேஷ்குருக்கள், ஏ.மகாதேவ சிவாச்சாரியா் உள்பட பலா் கலந்துகொண்டாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.