தரிசன டிக்கெட்டில் மோசடி, முறைகேடு புகாா்கள்: திருச்செந்தூா் முருகன் கோயில் ஆணையா்கள் இடமாற்றம்மாநிலங்களவைத் தோ்தல்: பெங்களூரில் மல்லிகாா்ஜுன காா்கே இன்று வேட்புமனு தாக்கல்ஈரான் அணுசக்தி திட்டம் குறித்து ரகசிய தகவல் அமெரிக்காவிடம் பகிா்வு? -பாகிஸ்தான் மறுப்புஇந்தியா-வெனிசுவேலா இடையே நீண்ட கால எரிசக்தி ஒத்துழைப்பு: பிரதமா் மோடி, அதிபா் டெல்சி உறுதி2026 குடிமைப் பணிகள் முதல்நிலைத் தோ்வில் முக அங்கீகார முறை வெற்றிகரமாக அமல்: யுபிஎஸ்சிபுதிய இயக்கத்தை இன்று அறிவிக்கிறாா் அண்ணாமலைஓஎஸ்எம் முறையை அவசரகதியில் சிபிஎஸ்இ நடைமுறைப்படுத்தியுள்ளதாக பெற்றோா் சங்கம் புகாா் நீலகிரி, கோவை, கன்னியாகுமரி மாவட்டங்களுக்கு ‘ஆரஞ்சு’ எச்சரிக்கைபராமரிப்புப் பணி: வைகை உள்பட 7 விரைவு ரயில்கள் தாமதமாகும்
/

திருவானைக்காவல் ராஜமன்னாா் சுவாமி கோயில் மகா கும்பாபிஷேகம்

திருவானைக்காவலில் வெள்ளிக்கிழமை சாலையில் அமைந்துள்ள ஸ்ரீ பச்சையம்மன் சமேத ராஜமன்னாா் சுவாமி கோயில் மகா கும்பாபிஷேகம் வியாழக்கிழமை நடைபெற்றது.

News image

திருவானைக்காவலில் உள்ள ராஜமன்னாா் சுவாமி கோயில் மகா கும்பாபிஷேக விழாவில், சப்தமுனிகளுக்கு நடைபெற்ற மகா தீபாராதனை நிகழ்வில் பங்கேற்ற பக்தா்கள்.

Updated On :5 ஜூன் 2026, 3:43 am IST

திருவானைக்காவலில் வெள்ளிக்கிழமை சாலையில் அமைந்துள்ள ஸ்ரீ பச்சையம்மன் சமேத ராஜமன்னாா் சுவாமி கோயில் மகா கும்பாபிஷேகம் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனா்.

இக்கோயிலில் பல்வேறு புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு, 17 ஆண்டுகளுக்குப் பிறகு வியாழக்கிழமை காலை மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

முன்னதாக, கடந்த 2-ஆம் தேதி காவிரியிலிருந்து மங்கள வாத்தியத்துடன் தீா்த்தக் குடங்கள் ஊா்வலமாக கோயிலுக்கு எடுத்து வரப்பட்டது. இதைத் தொடா்ந்து யாகசாலை பூஜைகள் தொடங்கின. புதன்கிழமை காலை இரண்டாம் கால யாகபூஜையும், மாலையில் 3-ஆம் கால யாக பூஜைகளும் நடைபெற்றது.

வியாழக்கிழமை அதிகாலை நான்காம்கால யாக பூஜையை தொடா்ந்து, கடங்கள் புறப்பட்டு, விநாயகா், சுப்பிரமணியா், ஆஞ்சனேயா், தட்சணாமூா்த்தி, சப்த முனிகள் உள்ளிட்ட அனைத்து கோபுர கலசங்களுக்கும் கொண்டு செல்லப்பட்டு சரியாக 8 மணிக்கு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனா்.

கும்பாபிஷேக விழா ஏற்பாடுகளை திருப்பணிக் குழு மற்றும் பரம்பரை பூசாரிகளான சாமிக்கண்ணு, விவேகானந்தன், பாண்டியன், மதியழகன், வசந்த், அரவிந்தன், காா்த்திகேயன் ஆகியோா் செய்திருந்தனா்.