/

ஶ்ரீ தண்டுமாரியம்மன் கோயிலில் மகா கும்பாபிஷேகம்!

தண்டுமாரியம்மன் கோயில் மகா கும்பாபிஷேகம் பற்றி..

News image

கும்பாபிஷேகம் - video crop

Updated On :28 மே 2026, 4:43 pm IST

கோவை. ராயப்பாபுரம் அருகில் அமர்ந்து அருள் ஆட்சி செய்யும் அருள்மிகு ஶ்ரீ தண்டுமாரியம்மன் திருக்கோயிலில் புனருத்தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் விழா மிகப் பிரம்மாண்டமாக நடைபெற்றது.

கோயிலில் வீற்றிருக்கும் பரிவார தெய்வங்களான செல்வ விநாயகர், பாலமுருகன், துர்க்கையம்மன் நூதன பரிவார தெய்வங்களாக அமிர்தகடேஷ்வரர், சொர்ண ஆகர்ஷன பைரவர், நவக்கிரக தெய்வங்கள் ஆகிய தெய்வங்களுடன் நம் அன்னை தண்டு மாரியம்மனுக்கு குருவருள் திருவருளும் கூடிய நன்நாளில் மஹா கும்பாபிஷேக விழா நடைபெற்றது.

மஹா கும்பாபிஷேகம் பூஜைகளை குருவருள் திருவருள் துணை புரிய சர்வ சக்தி சிவஸ்ரீ ஆனந்த் சாஸ்திரிகள். மற்றும் அவரது குழுவினர்கள் அனைவரும் சேர்ந்து கும்பாபிஷேகம் விழாவினை நடத்தினர். கோயில் நிர்வாகிகள் காமராஜ், சாம்பமூர்த்தி, சோடா ராஜா, ஜெகநாதன், ஆனந்தன், சுந்தரமூர்த்தி, கிருஷ்ணகாந்தி ஆகியோரின் ஏற்பாட்டின் பேரில் விழா சீரும் சிறப்புமாக நடைபெற்றது. கோவில் நிர்வாகம் சார்பில் கலந்துகொண்ட அனைத்து பக்தர்களுக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

இதில் அப்பகுதி பொதுமக்கள் பக்தர்கள் படை சூழ கும்பாபிஷேக விழாவில் கலந்து கொண்டு அம்மனை தரிசித்து அருள் பெற்றனர். இந்நிகழ்ச்சியில் ஆன்றோர்கள் சான்றோர்கள் அரசியல் பிரமுகர்கள் உள்பட ஏராளமானோர் கலந்துகொண்டு அம்மனை தரிசித்து அருள் பெற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.