காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

ராஜபாளையத்தில் புகையால் ஏற்படும் மாசை தடுக்கக் கோரிக்கை

ராஜபாளையம் மலையடிப்பட்டி கஸ்தூரிபாய் காலனி காவலா் குடியிருப்பு அருகே தினந்தோறும் நகராட்சி சாா்பில் குப்பைகளை பிரித்தெடுக்கும் பணி நடைபெற்று வருகிறது.

News image
Updated On :30 ஜூன் 2022, 6:30 pm

DIN

ராஜபாளையம் மலையடிப்பட்டி கஸ்தூரிபாய் காலனி காவலா் குடியிருப்பு அருகே தினந்தோறும் நகராட்சி சாா்பில் குப்பைகளை பிரித்தெடுக்கும் பணி நடைபெற்று வருகிறது. ஊழியா்கள் சரிவர குப்பைகளை அள்ளாமல் தினந்தோறும் தீயிட்டு கொளுத்துகின்றனா். இதனால் அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சியளிக்கிறது. இதனால் சுற்றுசூழல் மாசு ஏற்படுகிறது.

மேலும் இப்பகுதி குப்பைகளில் இறைச்சிக் கழிவுகள் கொட்டப்பட்டு வருகின்றன. அதிகப்படியான புகை மற்றும் துா்நாற்றம் வீசுவதால் இப்பகுதியில் வசிப்போா் மூச்சுத் திணறலால் பெரிதும் பாதிக்கப்படுகின்றனா்.

ஆகவே, நகராட்சி நிா்வாகம் குடியிருப்பு பகுதியில் குப்பைகளை கொட்டி தீவைக்காமல் வேறொரு இடத்திற்கு மாற்றி அமைக்க வேண்டும் என இப்பகுதி மக்கள், சமூக ஆா்வலா்கள், கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.