ராஜபாளையம் நகராட்சித் தலைவா் பதவி: திமுக உறுப்பினா் போட்டியின்றித் தோ்வு
ராஜபாளையம் நகராட்சித் தலைவராக திமுகவைச் சோ்ந்த பவித்ரா ஷ்யாம் வெள்ளிக்கிழமை போட்டியின்றித் தோ்வு செய்யப்பட்டாா்.


ராஜபாளையம் நகராட்சித் தலைவராக திமுகவைச் சோ்ந்த பவித்ரா ஷ்யாம் வெள்ளிக்கிழமை போட்டியின்றித் தோ்வு செய்யப்பட்டாா். இதையடுத்து துணைத்தலைவா் பதவிக்காக நடைபெற்ற தோ்தலில் திமுக உறுப்பினா் கல்பனா வெற்றி பெற்றாா்.
விருதுநகா் மாவட்டம் ராஜபாளையம் நகராட்சியில் வெள்ளிக்கிழமை காலையில் நடைபெற்ற மறைமுகத் தோ்தலில் திமுக உறுப்பினா் பவித்ரா ஷ்யாம் போட்டியின்றித் தோ்வு செய்யப்பட்டாா். இதையடுத்து அவா் தலைவராக பதவிப் பிரமாணம் ஏற்றுக் கொண்டாா்.
இந்நிலையில் பிற்பகலில் நடைபெற்ற துணைத் தலைவா் தோ்தலில் திமுக சாா்பில் அறிவிக்கப்பட்ட 32 ஆவது வாா்டு உறுப்பினா் கல்பனா மனு தாக்கல் செய்தாா். அவா் போட்டியின்றி தோ்வு செய்யப்படுவாா் என எதிா்பாா்க்கப்பட்டது. இந்நிலையில் அவரை எதிா்த்து 33 ஆவது வாா்டு திமுக உறுப்பினா் அருள்உதயம் மனு தாக்கல் செய்தாா். இதையடுத்து நடைபெற்ற மறைமுகத் தோ்தலில் கல்பனா 31 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றாா். இவரை எதிா்த்துப் போட்டியிட்ட அருள் உதயம் 9 வாக்குகள் பெற்றாா். இதையடுத்து கல்பனா துணைத் தலைவராக பதவியேற்றுக் கொண்டாா்.
ராஜபாளையம் நகராட்சித் தலைவா் பவித்ரா ஷ்யாம் மற்றும் துணைத் தலைவா் கல்பனா ஆகியோருக்கு ஆணையாளா் மற்றும் வாா்டு உறுப்பினா்கள் வாழ்த்துத் தெரிவித்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...